Showing 33–48 of 106 results
-
Add to cart
சிந்து முதல் கங்கை வரை / Sindhu Muthal Gangai Varai
₹290₹270சமூகம் , தத்துவம் , வரலாறு , அறிவியல் , பயணநூல் , வாழ்க்கை வரலாறு , நாடகம் , கட்டுரை , ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய இரண்டாவது நாவல் .வைசாலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில் , வைசாலிக் குடியரசின் பிரதம சேனாபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்த்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது .கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கிலான சிம்மனின் கால வரலாற்றை பாட்னா மியூசியத்திலுள்ள 1600 செங்கற்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளிலிருந்து கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார் ராகுல்ஜி -
Add to cart
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா / India Since Independence
₹470₹437இந்தியா சுதந்திரம் பெற்றபோது , இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது , பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் , பொருளாதாரத் திட்டங்கள் , வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்நூல் மத்திய , மாநில அரசுகளில் கட்சிகளின் அரசியல் , பஞ்சாப் பிரச்சினை , வகுப்புவாத எதிர்ப்பு அரசியல் , தீண்டாமை போன்ற பிரதான சிக்கல்களை அலசி , நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அடிப்படைக் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது .1991 முதலான இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் , நிலச் சீர்திருத்தங்கள் , பசுமைப் புரட்சி ஆகியவற்றுடன் , புத்தாயிரமாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கூர்ந்து கவனித்து கருத்துரைத்துள்ளது .எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் மாணவர்கள் . ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் பயனளிக்கும் . -
Read more
சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள் / Somanathar Varalaatrin Pala Kuralgal
₹300₹279இது மிகச் சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு … இந்த விசயம் பற்றி இந்து , பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் , இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த அறிவார்ந்த படைப்பு இது …. பல்வேறு மூலாதாரங்களினூடே பயணிப்பதன் மூலம் வியப்பூட்டும் அனுபவத்தை வாசகர்கள் பெற்றுக் கொள்ள முடியும் … இந்தப் பேசுபொருள் குறித்து மறுத்தொதுக்க இயலாத ஆதாரங்களைக் கொண்டு எளிய மொழியில் எழுதப்பட்டுள்ள கூர்மையான படைப்பு இது .– ஃப்ரண்ட்லைன் -
Read more
சோழர்கள் (1&2) / The Cholas (1&2)
₹1,250₹1,163பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம் . கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே , கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன . யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன . இத்தகு சிறப்புடைய வரலாற்றில் , சோழர்களின் ஆட்சி , ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது .சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் , அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது . இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை .சோழர் காலத்தின் முழுமையான வரலாறு , சோழப் பேரரசின் ஆட்சி முறை , வரிவிதிப்பு , நிதி , மக்களின் வாழ்க்கை முறை , வாணிபம் , தொழில் , விவசாயம் , நிலஉரிமை , கல்வி , சமயம் , கலை , இலக்கியம் ஆகியவற்றை , பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார் .