Showing 17–32 of 106 results
-
Read more
உலக மக்களின் வரலாறு / A People’s History of the World
₹750₹698நாம் இருபத்தொன்றும் நூற்றாண்டில் நுழைகிற போது , இந்த உலகம் பேராசை கொண்டதாக , ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக , இனவெறி , தேசிய மேலாதிக்கவெறி கொண்டதாக , காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக , பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது . — . அரசு தோன்றி , சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு , மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்காளக வாழ்ந்தனர் . அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது , உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன … … வேறு சொற்களில் சொல்வதானால் , ஆளுவோரோ ஆளப்படுவோரோ , எழைகளோ பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் , ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர் .
-
Read more
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukkia Paththu Natkal
₹550₹512மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றி கரமான ருஷ்ய சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தது இந்நூலேயாகும் .அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல் . உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்த எண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும் . -
Add to cart
ஊர்சுற்றிப் புராணம் / Oorsutri Puranam
₹130₹121‘ இந்தியப் பயண உலகின் தந்தை ‘ எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும் , வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல் .
உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும் ‘ என அறிவித்துக்கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல் , புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும் . -
Read more
கரமசோவ் சகோதரர்கள் 1,2 / Karamazov Sagotharargal 1,2
₹1,500₹1,395நம்மால் ஒருபோதும் தஸ்தயேவ்ஸ்கியின் நிலையை அடைய முடியாது . அது நமக்குத் தெரியும் . ஆயினும் , மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் …. ‘ பிரதர்ஸ் கரமசோவை ‘ மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் … எவ்வளவோ மகத்தான நூல் என்று மனதில்படுகிறது . இதுவரை காணாத புதிய தளத்தைக் கண்டு பிடிக்கிறேன் . ” – எம்.டி.வாசுதேவன் நாயர்” … தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன் , தன் காலத்தை அறிந்து கொள்ள விழையும் மனிதன் , வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்து கொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம்வரை , அவனுக்குத் தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டு தானிருக்கும் . “– சுந்தர ராமசாமி “தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு , என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு . ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முதலாக என் பார்வை விழுந்தது அப்போதுதான் . அல்லது , தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயேவ்ஸ்கிதான் …. அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன் ! அசைக்க முடியாதபடியும் , மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது . விழிப்பதும் , அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்த வரை மடிந்துவிட்டது … நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன் . என்னைப் பொறுத்தவரை , மனிதனின் சாதாரண துயரங்கள் . போட்டி பொறாமைகள் , ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள் , குப்பை கூளங்கள் என்றாகின ! ” – ஹென்றி மில்லர்