Showing 1–16 of 27 results
-
Add to cart
வாழ்வு… இறப்பு… வாழ்வு… / Vazhvu…Irappu…Vazhvu…
₹180₹167ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடை களைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல .” நுண்ணுயிரியலின் தந்தை ” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “ பாஸ்டராக்கம் ” அறிமுகமானது .பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது . வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது . இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும் .ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்த கைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள் ளார் எரிக் ஒர்சேனா .பஸ்தேரை உருவாக்கிய பெற்றோர் , அவர் தம் ஆய்வுப் பணியில் அயராது துணை நின்ற தியாக வடிவான மனைவி மரி . நோயின் தாக்குதலுக்கு இளமையிலேயே இரையான அவருடைய மகள்கள் , ஆயிரம் கருத்து வேற்றுமை இருப்பினும் பஸ்தேரின் திட்டங்களை நிறை வேற்ற உதவிய அறிவார்ந்த உதவியாளர்கள் எனப் பலர் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர் .பஸ்தேரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான கட்டங் களை அறியும் ஆர்வமுடன் நூலை வாசிக்கத் தொடங் கும் நாம் , இறுதியில் அந்த மாமேதையுடன் சில நாட்கள் வாழ்ந்த அனுபவத்தைப் பெறுகிறோம் . வாழ்க்கை வரலாற்று நூலினையும் விரும்பி வாசிக்கும் வண்ணம் சுவைபட வழங்க முடியும் என எரிக் ஓர்சேனா நிறுவியுள்ளார் . -
Read more
தமிழர் பண்பாடும் தத்துவமும் / Tamilar panpaadum thathuvamum
₹200₹186முன்னுரையிலிருந்து …பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘ தமிழர் பண்பாடும் , தத்துவமும் ‘ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் . இந்நூல் , பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது . ‘ பண்பாடு ‘ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு , பரி பாடலில் முருக வணக்கம் , கலைகளின் தோற்றம் , உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன .‘ பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள் ’ என்னும் தலைப்புள்ள கட்டுரை , பொருள்முதல் வாதத்தை ( உலகாயதக் கொள்கையை ) ஆராய்கிறது . வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர் . ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை . திரு நா . வானமாமலை அவர்கள் , தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார் .பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை . சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள் , அறிவுக்கு விருந்தாக உள்ளன . இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில . பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன் .சீனி வேங்கடசாமி …