Showing 33–48 of 142 results
-
Read more
கடவுளின் நாற்காலி / Kadavulin Naarkali
₹220₹205தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற , அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார் . ஆப்பிரிக்காவின் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர் . தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வரிசையில் ‘ கடவுளின் நாற்காலி ‘ மிக முக்கியமான இடத்தைப் பெற்றுவிடும் என்று நம்புகிறேன் . துவங்கிய வேகத்தில் 200 பக்க நாவலை வாசித்து முடித்த அனுபவம் ஆச்சரியமானது . இக்கதையின் பிரமிப்பு என்பது ஒரு வகையில் ‘ ஹாலிவுட் அசத்தல் ‘ என்றே சொல்லலாம் .எழுத்தாளர் பொன்ஸீ -
Read more
காலந்தோறும் காவிரி / Kalanthorum Kaveri
₹320₹298காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக்கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன் . காவிரி துவங்கும் இடத்திலிருந்து , முடியும் இடம் வரையிலும் , இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள் , வளர்ந்த நாகரிகம் , விவசாயம் , மக்கள் , ஊர்கள் , போர்கள் , படுகொலைகள் , இலக்கியப் பதிவுகள் , கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல் , எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டுவந்துள்ளார் . காப்பியங்களிலும் , புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும் , காவிரி வளர்த்ததும் , காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக , காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை .மு.வேடியப்பன் -
Read more
காலமற்ற வெளி / Kaalamatra Veli
₹250₹233இங்குள்ள சீர்மையின் குழைவில் அமைதியிழந்து அதை சமன்செய்ய விழையும் தனது கரிசனத்தினால் உள்பயணிக்கும் தார்கோவ்ஸ்கியும் , வேற்று கிரகங்களை நாடும் சினிமாவின் ஆன்மபலம் நிறைந்த சாகச யாத்ரிகன் ஹெர்சாக்கும் இங்கு தங்களது பயணத்தின் தன்மையினால் வேறுபட்ட போதிலும் கவிதையையும் தரிசனத்தையும் அடிப்படையாகக் கொண்டு மருதன் பசுபதி அவர்களை இணைப்பது அலாதியானதொரு அனுபவமாக இருக்கிறது .ஐபேரா.சொர்ணவேல் ஈஸ்வரன் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் அமெரிக்கா .ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும் நிலத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின . அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர் . எங்கள் குருநாதர் பாலு மகேந்திரா வின் மாணவர்களில் ஒருவரும் , என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் ‘ காலமற்ற வெளி ‘ என்னும் இத்தொகுப்பு முக்கியமானது .இயக்குனர் வெற்றிமாறன் -
Read more
காலமாற்றம் / Kaalamaatram
₹320₹298காலத்துக்கேற்ற முன்னோக்கிய பயணத்தில் , மனதின் பிடி இடையிடையே கைவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறது . அப்போது பல்வேறு மொழிகள் பேசுகிற , பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அயல்வாசிகளும் , சக ஊழியர்களும் , வெறும் அறிமுகம் மட்டுமே உள்ள ஏராளமான மனிதர்களும் அடங்கிய நீண்டதொரு வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது . எனது ஆன்மாவினுள் என்றோ கலந்துபோயிருந்த அவர்களது மகிழ்ச்சியும் வேதனைகளும் என்னுள் புனர்ஜென்மம் பெறுகின்றன . அவை உருவாக்கும் மனவுணர்வுகள் இலக்கியத் தாகத்துக்கு நீரூற்றாக அமைகின்றன .ஆகவேதான் , எனது பல படைப்புகள் கேரளத்துக்கு வெளியே நிகழும் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன . தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியாஊக்கியைப் பெற இயலும் . எனில் , நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு . ‘ கால மாற்றம் ‘ என்னும் இந்த நாவலின் கற்பனைக் கதாமாந்தர்களும் ஒடிசா கலாசார பின்னணியுடன்தான் வந்துபோகிறார்கள்.