Showing 17–32 of 195 results
-
Read more
Gemini Circle/ஜெமினி சர்க்கிள்
₹200₹186எளிய மக்களின் கதைகளை எளிய மொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெவ்வேறு பாணிகளைக் கையாண்டு அக்கதைகளைச் சிக்கலானவையாக மாற்றிவிடுகிறார்கள் பலர். அப்படி மாற்றினால் மட்டுமே அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சோம. வள்ளியப்பனின் எழுத்து அந்த வகையில் மாறுபட்டது. சமுதாயத்தில் நம்மைச் சுற்றிப் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, பலதரப்பட்ட உணர்வுகளை, அவரவர் நிலைப்பாடுகளை சிக்கலில்லாத, குழப்பமில்லாத நடையில் விவரித்துக்கொண்டு செல்கிறார் அவர். அந்த எளிமை அதற்குண்டான வசீகரத்தை எப்படியோ பெற்றுக்கொண்டு விடுகிறது. நீங்களும் அதை உணர்வீர்கள். ஜீவனுள்ள இந்தக் கதைகள் உங்களோடு நேரடியாகப் பேசும். தாக்கத்தையும் ஏற்படுத்தும். சோம. வள்ளியப்பனின் எழுத்தில் ‘நெஞ்சமெல்லாம் நீ’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘பட்டாம்பூச்சியின் கண்ணாமூச்சி காலங்கள்’ என்னும் குறுநாவலும் முன்னதாக வெளிவந்துள்ளன.
-
Read more
Haridhra Nadhi/ஹரித்ரா நதி
₹225₹209ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம். – இரா.முருகன்
-
Read more
India Kandupidikkapatta Kathai/இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
₹475₹442அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
-
Read more
Kaalathin Kural /காலத்தின் குரல்
₹240₹223உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள்.
அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது.
ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும் புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதிலுள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு.
இது காலத்தின் குரல் மட்டுமல்ல.காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும்கூட. இஸ்க்ராவின் அழகிய, உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்பில் மலரும் இந்நூல் படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்றது.
-
Read more
Kakkai Siraginile /காக்கைச் சிறகினிலே
₹230₹214பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி!
ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன?பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம்.
ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.
-
Read more
Kanchi Tharagai/காஞ்சித் தாரகை
₹400₹372சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
-
Read more
Kanchi Tharagai/காஞ்சித் தாரகை
₹400₹372சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
-
Read more
Maanavargalukkana Tamil – Part-4/மாணவர்களுக்கான தமிழ் பாகம் – 4
₹250₹233தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம்.திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்மீன் என்று ஏன் அழைக்கிறார்கள்? இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு?திருவாசகம் படித்தால் நாம் அழகாக மாறிவிடுவோமா? வள்ளல் என்று யாரை அழைக்கலாம்? அறநூல்கள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? வரலாற்றையும் கதையையும் ஒன்று கலந்து எழுதலாமா?சுவையான எடுத்துக்காட்டுகளோடு கதைப்போக்கில் அமைந்திருக்கும் இந்நூல் தமிழ் இலக்கணத்தை இனிக்க, இனிக்க அறிமுகப்படுத்துகிறது.பெரும் வரவேற்பைப் பெற்ற மாணவர்களுக்கான தமிழ் நூல் தொடரின் நான்காம் பாகம் இது. -
Read more
Marakappatta Varalaru /மறக்கப்பட்ட வரலாறு
₹240₹223மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும்.
பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் போன்றோரைக் கடைசியாக எப்போது நாம் கடந்து வந்தோம்? இவர்கள் உருவாக்கிய புயல் எந்த அளவுக்கு இன்று நம் நினைவில் இருக்கிறது?
வரலாற்றின் இண்டு இடுக்குகளில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு காலத்தில் பெரும் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மீட்டெடுத்து வந்து அளிக்கிறார்
ஜெ. ராம்கி. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு துப்பறியும் கதைபோல் இறக்கைக் கட்டிப் பறக்கிறது. -
Read more
Pakistan India Pirivinai/பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை
₹600₹558பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்து தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோரின் கோணம், பிரிவினை தொடர்பான உலக நாடுகளின் வரலாறு என அனைத்துக் கோணங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு ஆழமாகவும் எந்த அளவுக்கு நடுநிலையோடும் அண்ணல் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, பிரிவினைதான் ஒரே தீர்வு எனும் முடிவுக்குதான் அம்பேத்கரும் வந்து சேர்கிறார். அந்தப் பிரிவினையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது குறித்து அவர் முன்வைக்கும் பார்வை தனித்துவமானது. ஆனால் அவர் பார்வையை ஒருவரும் கணக்கில் கொள்ளவில்லை. அதன்பின் நடந்தவை நமக்குத் தெரியும். 1940களில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்பேத்கரின் இந்நூலை இன்றைய அரசியல் சூழலில் நாம் வாசிப்பதும் விவாதிப்பதும் முக்கியம்.
-
Read more
Pillaiyar Suzhi/பிள்ளையார் சுழி
₹300₹279பிள்ளையார் சுழி’ நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல்.
உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது. கீழே
கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல்.
‘திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்… மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை… ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா… ‘டெல்லிகணேஷ்’ என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி…’ என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது.
-
Read more
Rajiv Gandhi/ராஜிவ் காந்தி
₹250₹233இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கிடையாதுதான். இருந்தாலும், எமர்ஜென்சி முதல் எம்.ஜி.ஆர் வரை; அசாம் முதல் ஆசிய விளையாட்டு வரை; போபால் முதல் பஞ்சாப் விவகாரம் வரை; அயோத்தி முதல் அமிதாப் பச்சன் வரை; பிரணாப் முகர்ஜி முதல் போஃபர்ஸ் வரை; சார்க் முதல் ஷாபானு வரை; வி.பி.சிங் முதல் விடுதலைப்புலிகள் வரை; கம்ப்யூட்டர் முதல் கட்சித்தாவல் தடைச்சட்டம் வரை; ஜெயவர்த்தனே முதல் ஜெயலலிதா வரை அவர் அரசியல் வாழ்வின் அத்தியாயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் படர்ந்தும், விரிந்தும் உள்ளன. இந்தியாவை அவர் முன்னால் நகர்த்திச் öன்றிருக்கிறார்; பின்னுக்கும் இழுத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமின்றி தோல்விகளிலிருந்தும் தடுமாற்றங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. ராஜீவ் காந்தியின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் அன்றைய இந்தியாவின் நிழல் எவ்வளவு அழுத்தமாக இன்றைய இந்தியாவின்மீது படிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் விரிவான, விறுவிறுப்பான படைப்பு.
-
Read more
Romila Thapar Orr Eliya Arimugam / ரொமிலா தாப்பர்.
₹200₹186முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் சுருக்கமான அறிமுகம் அவருடைய படைப்புகளை மேலும் நெருங்கிச் சென்று வாசிப்பதற்கான உந்துதலை வழங்கும்.
-
Read more
T.Dharmarajin Iyotheethaasariyam / டி. தருமராஜின் அயோத்திதாசரியம் .
₹450₹419அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலாக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ். அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக்கொடுக்கும் ஆய்வுச்சட்டகங்கள் புதுமையானவை, முக்கியமானவை. தருமராஜின் ஆய்வு முறையியலையும் அந்த முறையியலைப் பொருத்தி ஆராய்வதன் மூலம் வெளிப்படும் அயோத்திதாசரையும் பன்முக நோக்கில் அனுதி, விவாதிக்கிறது இந்நூல்.
ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், சமஸ், பிரேம், ஏர் மகாராசன், சரவண கார்த்திகேயன், சுரேஷ் பிரதீப், ஈஸ்வரபாண்டி, சாந்தி நக்கிரன், இராவணன் அம்பேத்கர், கோபிநாத், கலையரசி, சக்திவேல், கார்த்திக், மனோஜ் பாலசுப்ரமணியன் ஆகியோர் வெவ்வேறு கோணங்களிலிருந்து தர்மராஜின் பங்களிப்புகளை ஆராய்கின்றனர். தருமராஜின் கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுக்கும் பெரும் பணியை பணியை மேற்கொண்டதோடு ஓர் ஆய்வுக்கட்டுரையையும் வழங்கியிருக்கிறார் அரிபாபு.
சமயம், தொன்மம், பண்பாடு, கலை, அரசியல், மொழியியல், மூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் தேடலும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இந்நூல் பல புதிய திறப்புகளை அளிக்கும் என்பது உறுதி.
-
Read more
TCS – ஒரு வெற்றிக் கதை
₹550₹512ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள். வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.