Showing all 16 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அந்த முகில் இந்த முகில் / Antha Mugil Intha Mugil

    250 233

    இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆனையில்லா சிறுகதைத் தொகுப்பு / Aanai Illa Sirukathai Thogupu

    350 326

    இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை . நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை , நிகழ வாய்ப்பிருந்தவை , நிகழந்தவையும்கூட என்பேன் . பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒருகட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச் செல்கிறார்கள் . அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள் . புத்தம்புதிய ஓர் உலகு . ஒளிமிக்க உலகு . முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள் . என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன் . ஒருவேளை எழுதாமல் போகலாம் . ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன் . இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன . இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது . இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆயிரம் ஊற்றுகள் / Ayiram Uttrugal

    210 195

    இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை . அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் சய்கின்றன . மான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை . இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம் . நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம் . வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது . ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே . அவர்களில் பலர் அரசியர் , இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரு கலைஞர்கள் / Iru Kalaingargal

    220 205

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை . ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல , புனைவுகள் . அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள் . சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள் . அவர்களின் அகம் திகழும் சில கணங்களைத் தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன . இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் . சிறுகதைகள் அதியமானைப் பாடிய ஒளவையாரின் கண்களே நான் கோருவன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இலக்கியத்தின் நுழைவாயிலில் / Ilakiyathin Nuzhaivaiyil

    160 149

    இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஐந்து நெருப்பு / Ainthu Neruppu

    280 260

    குற்றத்தைச் செய்யவைப்பது என்ன ? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன் . ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனிமனிதனாக உணர்கிறது . தன் நலத்தை . தன் மகிழ்ச்சியை நாடுகிறது . சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது . அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது . தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது . குற்றத்தின் , தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை . அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை . ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்தக் கதைகளில் உள்ளன . அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள் . எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    குமரித்துறைவி / Kumarithuravi

    195 181

    1311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    தங்கப்புத்தகம் / Thangaputhagam

    330 307

    இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள் . திபெத் ஒரு தங்கப்புத்தகம் . வாசிக்க வாசிக்க விரிவது , வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது . மானுடத்திலிருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது . நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘ கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு . மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன . ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது . மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது . இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாகக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது . கனவில் எல்லாமே குறியீடுகள் . ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது . இது மெய்யான திபெத் அல்ல . இது நிக்கோலஸ் ரோரிச் தன் ஓவியங்களில் சித்தரித்த திபெத் . ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம் . அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண் . இந்தக்கதைகளில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது . ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    தேவி / Devi

    320 298

    இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம் . வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி , வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி . இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன் . அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது . இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன் . இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை , அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட . மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல . அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நத்தையின் பாதை / Nathaiyin Paathai

    100 93

    இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பத்துலட்சம் காலடிகள் / Paththulatcham Kaladigal

    300 279

    ஒளசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம் . அவர் தோன்றும் கதைகள் இவை . வழக்கமான துப்பறியும் கதைகளைப்போல ஒரு குற்றத்தைத் தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல . இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு , பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன . மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பொலிவதும் கலைவதும் / Polivathum Kalaivathum

    320 298

    இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை . அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது . முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது . எண்ணுகையில் இனிதாகிறது . இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன . உறவு , பிரிவு , கண்டடைதல் , கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன . எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது . வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மலை பூத்தபோது / Malai Pothapothu

    200 186

    இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள் , கவிதைக்குரிய முடிக்காத சொல்லி தன்மை , உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் நன்மை , சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள் . அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைப்வைய ஆகவே உணர்வெழுச்சிகளை , வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை . புள்ளகைக்க வைக்கும் , கற்பனை விரியச்செய்யும் , வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம் . அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    முதுநாவல் / Muthunaval

    330 307

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன . மிக மெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள் , அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன . எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ கண்டடைதல் அங்குதான் இக்கதைகளின் மையக் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது . இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன . அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை . இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை . மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது .. மலையுச்சி மேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது . இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாசிப்பின் வழிகள் / Vasipin Vizhigal

    210 195

    இந்நூல் இலக்கிய வாசிப்புக்குள் நுழையும் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு இலக்கியம் என்றால் என்ன . இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா . இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன , இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை . உலக இலக்கியக் களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை . ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு . இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள் . அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்து உண்மையான கலைத்தேடல்களுக்குச் செலுத்த இந்த விவாதங்களால் இயலும் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வான் நெசவு / Vaan Nesavu

    215 200

    ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது . ஆனால் அந்த அலுவலகச் சூழல் , தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை . தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின் , பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன . தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன .