Showing 33–48 of 61 results
-
Read more
தட்டப்பாறை / Tattapparai
₹650₹605வாழ்வின் மீதான தீவிரத் தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம் . மேம்போக்கான ஆட்களுக்கு அவை கடக்க இயலாத சலிப்பூட்டும் வெற்றுத் தகவல்கள் . கன்னி , கொடி , மோளை , பள்ளை , செம்போரை என ஆட்டின் வகைகளையும் தர்ப்பை புல்லையும் இடையனையும் தேடி அலைந்ததில் என் உடல் முழுக்க ஆட்டாம்புழுக்கை வாசம் . தட்டப்பாறை நாவல் என்பது இதுவல்ல . இதை வாசித்ததும் நீங்கள் தேடப்போகும் உங்களின் உள்மன விசாலமான எண்ணங்கள் தான் உண்மையான “ தட்டப்பாறை ” நாவல் .– யூசுஃப்– மஞ்சுளா -
Read more
நான் வடசென்னைக்காரன் / Naan Vadachennaikaran
₹180₹167பாக்கியம் சங்கரின் மொழி , அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகுடையதாக இருக்கிறது . அசலான மனிதர்களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது . செய்யும் பணியில் தம்மை ஒப்புக்கொடுத்து , உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது , எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப்பாகவே மாறிவிடும் . சங்கருக்கு மாறியிருக்கிறது .‘ நான் வடசென்னைகாரன் என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரியான முகத்தையும் , அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது .-பிரபஞ்சன் -
Read more
பாண்டியாட்டம் / Pandiyattam
₹320₹298அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும் , படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது . அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல . ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது . மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது . அப்படிப்பட்ட கடின வெற்றியை இக்கட்டுரைகள் இலக்காய் கொண்டிருக்கின்றன .
-
Add to cart
பேய்ச்சி / Peichi
₹300₹279நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு . ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக , பின்னலாக உருக்கொள்ள வேண்டும் . ஒரு வரலாற்றுப் பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும் . கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும் . ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது . நவீனின் முதல் நாவல் ‘ பேய்ச்சி ‘ அவ்வகையில் , மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில் , மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம் .சுனில் கிருஷ்ணன்