Showing 17–32 of 44 results
-
Read more
எனது பயணம் / My Journey
₹195₹181சின்னஞ்சிறு தீவான ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நம் நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராக உருவான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையானது , அசாதாரணமான மன உறுதி , அபாரமான தைரியம் , அயராத விடாமுயற்சி , செய்கின்ற ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஆகியவற்றைப் படிக்கற்களாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகின்றது .இப்புத்தகத்தில் டாக்டர் கலாம் அவர்கள் , தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஆசுவாசமாக நின்று திரும்பிப் பார்த்து உணர்ச்சிபூர்வமாக அசை போடுகிறார் . அவை ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் எவ்வாறு பெரும் தாக்கத்தை விளைவித்தன என்பதை வாசகர்களோடு அவர் பகிர்ந்து இருந்தபோதும் கொள்கிறார் . தான் சிறுவனாக வளர்ந்தபோதும் வாலிபனாக தாக்கத்தை தனது வாழ்க்கையில் ஆழமான ஏற்படுத்திய நபர்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பற்றியும் அவர் இதில் எடுத்துரைக்கிறார் . ஆழ்ந்த தெய்வ பக்தியுடன் இருந்த தனது தந்தையார் , அன்பே உருவான தனது தாயார் , தனது கண்ணோட்டத்தையும் தனது சிந்தனையையும் செதுக்கிய வழிகாட்டிகள் போன்ற , தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைத்து அன்புள்ளங்களையும் அவர் இதில் அவர் இதில் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறார் .சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் , பூரணமானதாக விளங்கும் டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அழகான பாடங்கள் இந்நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன . -
Read more
கதாநாயகன் / Hero
₹599₹557உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது . இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர் . நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் . நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை , நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது . அந்தப் பயணம் பற்றியதே இந்நூல் .இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரண்டு வெற்றியாளர்கள் , நம்புதற்கரிய தங்கள் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு , நீங்கள் உங்களுடைய மாபெரும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்தோடும்தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதையும் , அப்படி வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைந்து இவ்வுலகை ” மாற்றுவீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள் .முன்பு ஒரு கதாநாயகன் இருந்தான் . ‘கதாநாயகன் ‘ குறித்து மேலும் தகவலறியஇணையத்தளத்திற்கு வருகை தாருங்கள் . -
Add to cart
கர்ணன் / Karnan
₹899₹836என்ன , மீண்டும் மகாபாரதக் கதையா ? ” என்று நீங்கள் மலைக்க வேண்டாம் . நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது : பாண்டவர்கள் நல்லவர்கள் , துரியோதனன் வில்லன் ; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான் ; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார் ; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள் ; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான் ; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர் . என்ன , சரிதானே ?ஆனால் இதே மகாபாரதக் கதையை மராத்திய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார் . இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார் . அதன் விளைவாக , இப்புதினம் , ‘ நான் யார் ? ‘ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது .மேலும் , காலங்காலமாக மனித சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார் . ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும் , அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும் , சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் , ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது . இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும் , அப்பின்புலத்தின் காரணமாக சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன .எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம் , இந்தி , மலையாளம் , கன்னடம் , வங்காளம் , குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது .இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன் ! -
Read more
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி / How to Stop Worrying and Start Living
₹195₹181டேல் கார்னகியின் இந்த அற்புதமான புத்தகத்தைக் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி , தங்கள் வாழ்க்கையிலிருந்து பயத்தையும் கவலையையும் அறவே நீக்கி , மனநிறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் . இதில் இடம்பெற்றுள்ள எளிதில் நடைமுறைப்படுத்தத்தக்க உத்திகளை நீங்கள் சுவீகரித்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை பிரகாசமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மலரும் என்பது உறுதி .இப்புத்தகத்தில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கண்டறியலாம் :பணத்தைப் பற்றிய கவலைகளை அறவே நீக்குவது எப்படிஉற்சாகமாகவும் என்றென்றும் இளமையாகவும் இருப்பது எப்படிதினமும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உருவாக்கிக் கொள்ளுவது எப்படிவேலை , தொழில் , மற்றும் வணிகம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படிமொத்தத்தில் , மகிழ்ச்சிகரமான மற்றும் முழுமையானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் ஒரு வழிகாட்டி நூல் இது .உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரான டேல் கார்னகி , சுயமுன்னேற்ற ஆசான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் . 1936 ம் ஆண்டில் , ‘ நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி ‘ என்ற அவரது முதல் புத்தகம் வெளியானதிலிருந்து , கோடிக்கணக்கான வாசகர்கள் ஓர் ஒளிமயமான வாழ்க்கையை வாழ அந்நூல் உதவி வந்துள்ளது . அது இன்றளவும் தொடர்கிறது . -
Read more
காலை எழுந்தவுடன் தவளை / Eat That Frog
₹150₹140உங்களுடைய செய்யப்பட வேண்டிய வேலைகள் ‘ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை , இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை . வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை . முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி , அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர் . அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டுவிடுகின்றனர் .காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக , உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால் , அன்று அதைவிட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது . உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற , ஆனால் உங்கள் வாழ்வின்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு , ‘ ஒரு தவளையை உட்கொள்வது ‘ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார் .பின்வரும் விஷயங்களை அவர் இந்நூலில் தெளிவாக விளக்குகிறார் :நீங்கள் தினமும் உங்களுடைய மிக முக்கியமான வேலைகள்மீது மட்டும் கவனம் செலுத்தும் விதத்தில் உங்கள் நாட்களை ஒழுங்கமைத்துக் கொள்வது எப்படி ?மின்னணுக் கருவிகள் உட்பட ஏராளமான விஷயங்கள் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கத் தயாராக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து ஒருமித்த கவனக்குவிப்புடன் செயல்படுவது எப்படி ?• வெற்றிக்கான மூன்று முக்கியப் பண்புநலன்களான தீர்மானம் மேற்கொள்ளுதல் , ஒழுங்கை வளர்த்துக் கொள்ளுதல் , உறுதியுடன் செயல்படுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது எப்படி ?• உயர்ந்த செயற்திறனும் , உச்சபட்ச உற்பத்தித்திறனும் , அளப்பரிய ஆற்றலும் கொண்ட ஒரு நபராக ஆவதை நோக்கிய உங்கள் பயணத்தின் வேகத்தை அதிகரித்துக் கொள்வது எப்படி ? .இந்நூலை கவனமாகப் படித்து இதில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் , உங்கள் நேரமும் உங்கள் வாழ்க்கையும் உங்கள் வசமாகும் என்பது உறுதி ! -
Add to cart
கௌரவன் / Kauravan
₹499₹464நாமறிந்த மகாபாரதம் , குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை . எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன் ‘ துரியோதனன் .பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .இது ஒரு புறம் இருக்க –தென்னக ராஜ்யங்களின் கூட்டமைப்பின் ராஜகுருவான பரசுராமன் , குரு வம்சத்தை வீழ்த்தி ஒட்டுமொத்த பரதகண்டத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் .மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஏகலைவன் , சமுதாயத்தில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பை மீறி ஒரு போர் வீரனாக ஆகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான் ,நாகர்களின் தீவிரவாதத் தலைவனான தட்சகன் , கீழ்ச்சாதியினரையும் தீண்டத்தகாதவர்களையும் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு , ஒரு புரட்சியைத் தூண்டத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான் .சாதிப் பிரிவினை நம் சமுதாயத்திற்கு இன்றியமையாதது , அந்தக் கட்டமைப்புச் சீர்குலையும்போது , ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீரழிந்துவிடும் என்று வலியுறுத்தி , அதற்குப் புனித நூல்களை மேற்கோள் காட்டும் தெளமியன் போன்ற பிராமணர்கள் தங்களை அரசர்களின் ஆலோசகர்களாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் , தன் மனசாட்சிப்படி நடக்க முயலும் பட்டத்து இளவரசனான துரியோதனன் தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது ,அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்நிய நாட்டு இளவரசன் . அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன … -
Read more
கௌரவன் 2 / Gowravan 2
₹599₹557நாமறிந்த போரில் மகாபாரதம் , குருச்சேத்திரப் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை எல்லா நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த வழிகளிலும் தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் கௌரவன் ‘ துரியோதனன் , .பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பானரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்திய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் . தன் மனசாட்சிப்படி நடக்க முயனும் பட்டத்து இளவரசனான துரியோதனன்தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் தன் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தன்னப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது .அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்திய நாட்டு இளவரசனான சகுனி . அவன் உருட்டிய பகடைகள் எப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்நூலின் முதல் பாகத்தில் நாம் பார்த்தோம் .இந்த இரண்டாம் பாகத்தில் :போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன .தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன .அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர் .பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவி கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகன்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர் .தன் பங்குக்கு ஓர் ‘ அவதாரமும் ‘ சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது .இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும் , கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும் , உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் . -
Read more
சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு / Sapiens-A Brief History Of Humankind
₹499₹464இது மனிதனின் கதை . வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன் , உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது . நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும் , சுவாரசியமாகவும் , விறுவிறுப்பாகவும் , செறிவாகவும் , சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா ? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி .நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன . அவற்றில் சில :மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான் .வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான் .தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை .வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே ? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர் .அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள் ! -
Read more
தனிமனித வளர்ச்சி விதிகள் 15 / The Invaluable Laws of Growth
₹250₹233உங்களுடைய முழு ஆற்றலையும் அடையத் தேவையான முழுமையான கையேடு ! ‘தனிநபர் வளர்ச்சி விதிகள் 15 ‘ என்ற இந்நூல் , ஜான் மேக்ஸ்வெல்லின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று . ஒரு தனிநபர் என்ற முறையில் நீங்கள் எவ்வாறு மகத்தான வளர்ச்சியை அடைவது என்பதை மேக்ஸ்வெல் இந்நூலின் மூலம் கற்றுக் கொடுக்கிறார் .அவர் இந்நூலில் வலியுறுத்துகின்ற விஷயங்கள் பின்வருமாறு : .நீங்கள் எவ்வளவு தனித்துவமானவரோ , உங்கள் வளர்ச்சி அவ்வளவு தனித்துவமானது .நீங்கள் உங்கள் குறிக்கோளைக் கண்டுபிடிக்க விரும்பினால் , சுயவிழிப்புணர்வில் நீங்கள் வளர்ச்சியுற வேண்டும் .ஒரு சிறந்த மனிதராக ஆவதற்கு , நீங்கள் உங்கள் நடத்தையில் வளர்ச்சியடைய வேண்டும் . .ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைவராகவோ அல்லது பெற்றோராகவோ ஆவதற்கு , உங்கள் உறவுகளில் நீங்கள் வளர வேண்டும் .உங்களுடைய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு , பணம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய அறிவில் நீங்கள் வளர்ச்சி வேண்டும் .உங்கள் ஆன்மாவிற்குச் செறிவூட்டுவதற்கு , ஆன்மீகரீதியாக நீங்கள் வளர வேண்டும் .வளர்ச்சி உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது . நீங்கள் தினமும் செய்கின்ற ஏதோ ஒன்றை நீங்கள் என்றைக்கு மாற்றுகிறீர்களோ , அன்றுதான் உங்கள் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது .