Showing all 9 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அப்பாவின் வேஷ்டி / Appavin Vesti

    250 233
    எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும் . எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும் .
    அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன . அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான் . அதனால் தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர் .
    – பிரபஞ்சன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குயிலம்மை / Kuyilammai

    230 214
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தபால்காரர் பெண்டாட்டி / Thabaalkaarar Pendaatti

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாவல் பழ இளவரசியின் கதை / Naaval Pazha Ilavarasiyin Kathai

    250 233
    அவர்கள் இருட்டும் முன்பு , காட்டைக் கடந்தாக வேண்டும் . சதுப்பு நிலம் போன்று தரை , கால் உள்வாங்கியது . ஆபத்தான வெளி , சருகுகள் குப்பைகள் மூடி , மண்ணில் முகம் மறைந்து கிடந்தது . அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன் . அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான் . பெரியவன் வைத்த காலடிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன் .
    போட்ட அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான் . கார்கோடன் , அதன் சந்ததியர் படுத்துக்கிடக்கும் . ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் . என்னத்துக்கு ஓய்வு என்றால் சண்டை களைப்புதான் . பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுனனும் அவர்கள் பந்துமித்திரர்களோடு கார்கோடன் வம்சத் தாரோடு சண்டைக்கு வந்தார்கள் . காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ்ணன் , அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது . கார்கோடன் , மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு சொன்னான் . இந்த மலை போல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப கோடி வருஷங்களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம் . அதனால் இது எங்கள் பூமி என்றான் . யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை . சண்டை பல ஊழிகள் தொடர்ந்தது . இன்னும்தான் …
    -நூலிலிருந்து
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மகாபாரதம் / Mahabharatam

    300 279
    பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை . அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் , பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார் . பலராலும் வஞ்சிக்கப்பட்ட கர்ணனை அனுதாபத் துடன் பார்க்கிறார் . அதேசமயம் , கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . குந்தி , காந்தாரி , மாத்ரி , சத்யபாமா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார் . பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார் . போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார் . கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார் . கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார் . அர்ச்சுனன் , சாத்யகி , அசுவத்தாமன் , குந்தி , பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார் . வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையையும் பிரமிப்புடன் பார்க்கிறார் . இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம் .
    அரவிந்தன்
    இந்து தமிழ் நாளிதழ் – மதிப்புரை .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மரி என்கிற ஆட்டுக்குட்டி / Mari Enkira Aatukutty

    230 214
    மரியை எனக்குத் தெரியும் . அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் . வசதியான குடும்பம் . தெருவில் மூன்று கார்கள் நின்றன . நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் . வீட்டில் , அம்மா இல்லை . அதாவது குழந்தையிடம் இல்லை . அப்பா , பணம் பண்ணிக் கொண்டிருந்தார் . அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் . அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள் .
    குழந்தைகள் பெற்றோர்களிடம் , ஆசிரியர்களிடம் , உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான் . அது மட்டும்தான் , அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம் .
    – பிரபஞ்சன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மானுடம் வெல்லும் / Maanudam Vellum

    350 326
  • Out Of Stock SAVE 7%
    Read more

    யாசுமின் அக்கா / Yaasumin Akka

    250 233
    துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா ? முடியும் . மகத்தான ஞானிகள் , துறவிகள் குடும்பத்துக்குள் , குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள் .
    அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து . இறந்து பிறந்தது . கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும் ? மனைவி , குடும்பத்தோடு வாழ்ந்தாலும் , மனசில் கொஞ்சம்கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி .
    ரிஷிகள் தொட்டார்கள் . குழந்தை பிழைக்கவில்லை . முனிவர்கள் , துறவிகள் , ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள் . குழந்தை அசையவில்லை . தாய் அலறுகிறாள் . கிருஷ்ணன் , ‘ நான் தொடலாமா ‘ என்கிறான் . எல்லோரும் சிரிக்கிறார்கள் . அவன் மனைவிகள் திகைக்கிறார்கள் . கிருஷ்ணன் தொட்டான் . குழந்தை பிழைத்துக்கொண்டது . முன்னுரையிலிருந்து .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வானம் வசப்படும் / Vaanam Vasappadum

    400 372
    தன் கையை எந்தச் சூழலின் கையில் சாட்டை இருந்தது என்பதையும் , பம்பரம் யாராக இருந்தார்கள் என்பதையும் வரலாறு அக்கறை கொள்கிறது . புறாவுக்குத் சதையை அறுத்துக் கொடுத்த பரம்பரையாக்கும் எங்கள் பரம்பரை என்பதற்கோ , தப்பாகக் கதவைத் தட்டிய தவறுக்காகக் வெட்டி கொண்ட கனவான் எங்கள் பரம்பரை என்று புராணங்களை உருவாக்கிக் கொள்வதற்கோ , நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும் என்று பொய்ப் புகழ் சூட்டிக்கொள்வதற்கோ , வரலாற்றைப் பூனைக்குட்டியாக்கிக் காள்ளும் போக்கு , அபாயகரமான போக்கு . சாதி , மத , இனப் புகழ் பரப்பும் பரப்புச் செயலூக்கி அல்ல வரலாறு . ஆள்வோர் , ஸ்தாபனங்கள் , விரும்புபவைகளைக் கருத்தில் காண்டு எழுதப்படுபவையும் அல்ல , வரலாறு . காலம் காலமாக , வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து நடக்கும் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மேல் எடுத்துச்சொல் வதே வரலாறு .
    முன்னுரையிலிருந்து …..