Showing 1–16 of 60 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    100 சிறந்த சிறுகதைகள் / 100 Sirantha sirukathaikal

    1,000 930

    ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும் , கதைக்கருவிலும் , சொல்லும் முறையிலும் , மொழி நுட்பத்திலும் , கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது . இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன . இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அண்டசராசரம் / Andasarasaram

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அபாய வீரன் / Abaya Veeran

    60 56
  • SAVE 7%
    Add to cart

    அயல் சினிமா / Ayal Cinema

    150 140

    உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா , பிரான்ஸ் , ருஷ்யா , ஹாங்காங்க் . மெக்சிகோ , சீனா , இத்தாலி , ஸ்பெயின் , நியூசிலாந்து , அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது . சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.

  • SAVE 7%
    Add to cart

    அரூபத்தின் நடனம் / Arupathin Nadanam

    350 326
    காஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும் . பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது . சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை .
    1930 களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித் திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன .
    நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா . அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆலிஸின் அற்புத உலகம் / Alice In Arputha Ullagam

    120 112
  • SAVE 7%
    Add to cart

    இந்திய வானம் / Indhiya Vaanam

    240 223

    பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை . இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன . அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு . நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது . அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பதில்லை . தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை . மனிதர்களை , அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இலக்கற்ற பயணி / Ilakkatra Payani

    175 163
  • SAVE 7%
    Add to cart

    உலக இலக்கிய பேருரைகள் / Ulaga Ilakkiya Peruraigal

    325 302

    ஹோமர் , ஷேக்ஸ்பியர் , டால்ஸ்டாய் . தஸ்தாயெவ்ஸ்கி , ஹெமிங்வே , பாஷோ , ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை . மறக்கமுடியாதவை . அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல் . ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.

  • SAVE 7%
    Add to cart

    எனதருமை டால்ஸ்டாய் / Enatharumai Tolstoy

    100 93

    உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதும் , அவற்றைப் பற்றிப் பேசுவதும் , எழுதுவதும் ஒரு அற்புதக்கலை . மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும் . தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் . க.நா.சு.வுக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக் களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார் . உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ள இக்கட்டுரைகள் மகத்தான படைப்பாளியின் வாழ்வுபற்றியும் படைப்பின் உள்ளடுக்குகள் பற்றியும் ஒருசேர அறியத் தருகிறது என்பதே இந்த நூலின் புதுமையாகும் .

  • Out Of Stock SAVE 6%
    Read more

    எலியின் பாஸ்வேர்டு / Eliyin Password

    35 33

    நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை . விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை . பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது .

  • SAVE 7%
    Add to cart

    கதாவிலாசம் / Kathavilasam

    380 353

    தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘ கதாவிலாசம் ’ ” . தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை , தன் சொந்த அனுபவங் களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. தமிழ் சிறுகதையின் சாதனையாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம் . கதைகளின் வழியாக வாழ்க்கையின் விசித்திரங்களையும் , ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது .