Showing all 9 results

  • SAVE 7%
    Add to cart

    அஞ்சலை / Anjalai

    350 326

    இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன் . விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது அஞ்சலை ‘ . இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அனல் காற்று / Anal Kattru

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆழி சூழ் உலகு / Aazhi Soozh Ulagu

    725 674

    கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று.

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இன்றைய காந்தி / Indraya Gandhi

    490 456
    இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் , பின்நவீனத்துவ காலகட்டத்தில் , மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில் , என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது . காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம் .
    காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும் இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார் . காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார் . காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார் . பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது .
    உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரவு / Iravu

    220 205
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கொற்றவை / Kottravai

    650 605
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சூடிய பூ சூடற்க / Soodiya Poo Soodarka

    150 140
    உந்தித் தீயின் வெம்மையும் , நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன . நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது . இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும் , தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது . எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது , காட்சிகள் மாறுகின்றன . முகங்களும் மாறுகின்றன . நிலமும் நீள்விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல் நடந்தபடியே இருக்கிறது . அந்தக் குரல் மட்டும் தன் கதியில் இருந்தபடி நடுவாண்மை பிசகாது எவர்க்கும் அஞ்சாது யாவற்றையும் உரசிப் பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்கிறது , மெல்ல மெல்ல அந்தக் கதைசொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது
    – எம் . கோபாலகிருஷ்ணன் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மணல் கடிகை / Manaal Kadigai

    400 372
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மனைமாட்சி / Manaimaatchi

    650 605