Showing 113–128 of 344 results
-
Read more
புயலிலே ஒரு தோணி / Puyalilae Oru Tooni
₹325₹302ப . சிங்காரத்தின் ‘ புயலிலே ஒரு தோணி ‘ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது .ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல் . வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது . காரணம் அதன் படைப்பு வலு . ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு . இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம் .வரலாற்று அடிப்படையிலும் ‘ புயலிலே ஒரு தோணி ‘ தனி இடத்தைப் பெறுகிறது . இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே .புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘ புயலிலே ஒரு தோணி ‘ . -
Add to cart
புலிநகக் கொன்றை / Pulinaga Kontrai
₹375₹349தென் ன் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை , படர்ந்து விரிகிறது இந்த நாவலில் . எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்து கிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை . படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா பாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் . சிதறுண்டுபோன , மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்களான நம்பியும் கண்ணனும் நுழைகிறார்கள் . மரணத்தின் மடியிலும் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல் .It is epical but minus the constraints of an epic . .The HinduReminds one of Garcia Marquez’s ‘ One Hundred Years of Solitude ‘ .. . The Statesman -
Add to cart
மந்திரவாதியின் சீடன் / Manthiravathiyin seedan
₹350₹326அப்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பவியாகி , அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பளிவெளிகள் , மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயனாமாக இந்த நாவல் விரிகிறது . குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் . பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது . பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புளைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன . தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்பொருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும் . . ” மத்திரவாதியின் சீடன் ‘ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல் , இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது . துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன . விநோதமான மனிதர்கள் , ஞானிகள் , வியப்பூட்டும் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான , சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் குழ்ந்துகொள்கிறது .ஜி- குப்புசாமி
-
Add to cart
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் / Maraikkappatta Mirutankac Cirpikal
₹195₹181ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது ? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள் ? பசு , ஆடு , எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து , ஒத்திசைவுடன் வினையாற்றி , ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது ? ஓசையை உருவாக்குவது யார் ? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவ திலில்லை . தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார் . அது வெறும் ஓசை அல்ல , வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு . வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது . வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது , இழுப்பது , திருகுவது , உடைப்பது , நசுக்குவது , கழுவுவது , வெட்டுவது , இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார் . மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல , அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும் , உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர் . இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார் . அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார் . அறிகிறார் , உணர்கிறார் . அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது .
-
Add to cart
மற்ற நகரம் / Mattra Nagaram
₹240₹223தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான் . அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது . நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில் , நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி . இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம் . நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம் . பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன . இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம் .நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது . -
Read more
மானசரோவர் / Maanacaroovar
₹250₹233பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘ மானசரோவர் ‘ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும் . நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை , போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல் , விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது . பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது . ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக , ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது . இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது . நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது .அரவிந்தன் -
Add to cart
மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் / Maamallapuram Pulikkukayum Kirushna Mantapamum
₹225₹209உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப் புலிக்குகைஎத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள இச்சின்னம் , சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோயில் என்பதையும்கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த சிற்பத்தொகுதிசங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல் .