Showing 1–16 of 71 results
-
Add to cart
அழியாச்சொல் / Azhiyasol
₹290₹270மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று கொண்டேயிருக்கும் , இடையறாத நனவெழுச்சி பொங்கிப் பெருகியோடும் ஒரு கதை சொல்லியின் குரல் . அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல் லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள் . தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு . பெண் உடல்பிம்பம் உடைபடும் தருணங்களும் , அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின் கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின் நதியாய் பாய்ந்திடத் தூண்டுகின்றன . ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க முடியாத பேருவகை வாழ்க்கை . கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க் கதைவெளிக்குள் அழைத்துச் செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே அழியாச்சொல் . அழியாச்சொல் , குட்டி ரேவதியின் முதல் நாவல் .
-
Add to cart
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? / Intha Unmaikal En Maraikkappadukirana ?
₹280₹260உலக மர்மங்களில்மிக முக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும் , பயிர் வட்டச் சித்திரங்கள் ‘ ( Crop circle ) மனிதர்களால் , உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ , அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை , இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? ‘ என்னும் இந்த நூல் ஆராய்கிறது . அதன் தொடர்ச்சியாக இவற்றை உருவாக்குவது வேற்று கோள் வாசிகளாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு , வேற்று கோள் வாசிகளின் இருப்பு உண்மையானதா என்பதையும் ஆராய்கிறது .எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் , தர்க்கரீதியான ஆதாரங்களைப் படிக்கும் வாசகர்களிடம் கொடுத்து , அவர்களையே இறுதி முடிவுக்கான இடத்திற்கும் கொண்டு செல்கிறது . படிக்கப் படிக்க ‘ இப்படியும் இருக்குமா ? ‘ என்ற வாசகர்களின் ஆவலை இந்நூல் மேலும் தூண்டிக் கொண்டேயிருக்கும் . -
Add to cart
எட்டாயிரம் தலைமுறை / Ettaayiram Thalaimurai
₹170₹158புதுமைப்பித்தன் , ந.பிச்சமூர்த்தி , கு.ப.ரா , மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன் . அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல . தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம் . அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து , இன்று காணாமல் போய்விட்ட அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில் , தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன . தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை .– ராஜமார்த்தாண்டன் -
Add to cart
காமரூபக் கதைகள் / Kaamarooba Kathaigal
₹499₹464சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன . ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது . அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை . பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல் . அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது . இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை . மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் . ஒற்றர்கள் , மறைந்து திரிபவர்கள் , தண்டிக்கப்படுபவர்கள் , தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது .