Showing all 14 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அன்பின் சிப்பி / Anbin Sippy

    130 121
    கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது . பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள் , அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன .
    இந்தத் தொகுப்பில் உள்ள சோ . தர்மனின் புனைகதைகள் சித்திரிக்கிற கரிசலை மையமிட்ட கதையாடல்கள் , அறத்திற்கு எதிரானவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களைக் கிராமத்தினரின் பேச்சுகளில் , நாட்டார் கதைமரபில் சொல்கிறது .
    கதைசொல்லியான தர்மன் , எந்த இடத்திலும் தனது அபிப்ராயத்தை முன்வைக்காமல் விலகி நிற்கிறார் . முடிவற்ற கதைகளின் மூலம் உயிர்த்திருக்கிற கிராமத்தினரின் வாழ்க்கையில் அறமற்றவை நிச்சயம் அழியும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரமா என்ற கேள்வி சோ . தர்மனின் படைப்புகளில் துல்லியமாக வெளிப்படுகிறது .
    கரிசல்மண் சார்ந்து சோ . தருமன் புனைகிற எழுத்துகள் , அசலான தன்மையில் இருத்தல் குறித்த கேள்விகளை முன்வைக்கின்றன . ஒருபோதும் முடிவற்ற கதைகளின் உலகில் , தனக்கான முத்திரையை அழுத்தமாகப் பதிப்பதில் சோ . தருமன் தனித்து விளங்குகிறார் . -ந . முருகேசபாண்டியன்
  • SAVE 7%
    Add to cart

    இந்து இந்தி இந்தியா / Inthu Inthi Inthiya

    300 279

    இந்து வகுப்புவாதத்தை சங் பரிவாரமும் பாஜகவும் மட்டுமே வளர்க்கவில்லை ; காங்கிரஸ் கட்சியிலும் இந்திய தேசியவாதத்திலும் தொடக்க காலத்திலேயே காணப்பட்ட இந்து வகுப்புவாதத்தைப் பட்டேல் முதல் சோனியா காந்திவரை பேணிப் பாதுகாத்துவந்துள்ளதை இந்த நூல் சொல்கிறது . காந்தியும் நேருவும் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது ; இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கியக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் வட இந்திய இந்துப் பெருமுதலாளிகள் ; பார்ப்பன – பனியா மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட செயற்கையான இந்தி ஆட்சிமொழியாக து ; அரசு விவகாரங்களில் மதம் தலையிடாத , அனைத்துத் தேசிய இனங்களும் முழுமையான தன்னாட்சி பெற்ற புதிய இந்தியா தேவைப்படுகிறது போன்றவை இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன . ஜனநாயகம் , மதச்சார்பின்மை , பன்முகத்தன்மை ஆகியவற்றில் அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு / Irupatham Nooraandu Sirukathaigal Nooru

    630 586

    தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு . இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன . அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . இவை எந்தச் சங்கப்பலகையின் தரவரிசைப்படுத்தலின் கீழும் தொகுக்கப்படவில்லை . ஆயினும் எழுதப்பட்ட காலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உயர்த்திய கதைகள் என்னும் பெருமைக்குரியவை . இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் சமூக இயங்குவெளி குறித்த புரிதலையும் பன்முகப் பரிமாணத்தையும் இக்கதைகள் கோடிட்டுக்காட்டுகின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கூகை / Kookai

    300 279

    கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை . மிகுந்த வலிமை கொண்டது . எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை . இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது . பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும் . கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும் , கோரம் என்று முத்திரை குத்துவதும் , கூகையைக் . காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் . பொதுப்புத்தி . கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி , சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ . தர்மன் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சூல் / Sool

    380 353
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சோ.தர்மன் அவர்களின் 5 புத்தகங்கள்

    1,540 1,432
  • SAVE 7%
    Add to cart

    தமிழர் மானிடவியல் / Tamizhar Maanidaviyal

    450 419
    கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள் , மனித நடத்தைகள் , சமூகங்கள் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வது மானிடவியல் , சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும் , பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள் , மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன .
    இந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார் . இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம் , சாதி , சமூக மாற்றம் , திருமணம் , சடங்குகள் , தெய்வங்கள் , திருவிழா , கைவினைக்கலை , புழங்குபொருள் , கிராமம் – நகரம் , சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப்படுத்துகிறார் . இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது ; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது .
    மானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு , மண்வாசிப்பு , மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும் . ஆனால் இந்தத் துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பை நிறைவாகச் செய்யவில்லை . பக்தவத்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன .
    பேராசிரியர் தொ . பரமசிவன்
    தாய்வழிச் சமூகம் தொடங்கி சமகாலச் சமூகம் வரை தமிழரின் தொன்மை , வாழ்வியல் , பண்பாடு அனைத்தையும் சொல்வதே ‘ தமிழர் மானிடவியல் .
    ‘ பேராசிரியர் சிவசுப்பிரமணியன்
    மானிடவியல் கட்டமைக்கும் மெய்ம்மையின் சிக்கலை அதன் நுட்பங்களோடு இந்த நூல் முன்னிறுத்துகிறது . தமிழ்ச் சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள விழையும் எவரும் சிறிது முயன்றால் இந்த நூலைக் கைவிளக்காகக் கொள்ளலாம் .
    பேராசிரியர் ஆ .இரா .வேங்கடாசலதி
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தூர்வை / Thoorvai

    230 214
    தூர்வை , இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு – வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை , அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் , சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல் .
    ‘ தூர்வை , அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக்குரல் , எதிர்ப்புக்குரல் … தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது . வரலாற்றின் ஒரு பரிமாணம் . வெகு தீர்மானமான அமைதியான குரல் . இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக , உண்மைக்குச் சாட்சியாக , மனசாட்சியின் குரலாக , இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது .
    வெங்கட் சாமிநாதன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாகரிகங்களின் மோதல் / Nakarikankalin Mothal

    540 502

    சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது , போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள , வலிமைவாய்ந்த பகுப்பாய்வு .
    உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி . ஹண்டிங்டன் , வெவ்வேறான பண்பாட்டு நாகரிகங்க ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார் .
    சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது . இன்றைய உலகம் முதலாளியம் , கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல , மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல் , கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன ; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது .
    அணுஆயுதப் பெருக்கம் , புலம்பெயர்தல் , மனித உரிமைகள் , ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன ; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை , கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில் , உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது . பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது .
    ஜப்பானியம் , சீனியம் , இந்துத்துவம் , இஸ்லாமியம் , மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம் , யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு , இன்று ஆப்கான முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது . இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீர்ப்பழி / Neerpazhi

    500 465
    கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள் , பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள் , நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்களை சோ . தர்மனின் கதைகளில் காணலாம் .
    சொல்கதையில் உள்ள கனவுப் புனைவும் எதார்த்தமும் சேர்ந்தவை சோ . தர்மனுடையது . ஊரின் மண்ணாலான குரல்வளையைக் கோதி , அவர் தம் கதைகளைக் காத்து நிற்கிறார் . நடுமதியத்தின் உலர்ந்த நில வெளியில் இயற்கையில் படிந்திருக்கும் ஆவியரோடு மரக்கிளைகளில் மறைந்திருக்கும் சிற்றூர்களை எழுதிய கலைஞனாக நான் அவரைப் பார்க்கிறேன் .
    இந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன .
    கருப்பு மண்ணில் , இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஓடையைக் கடக்க முயன்று இறந்துபோன வள்ளியின் பெயராலான ஓடை ஒவ்வொரு ஊரிலும் உண்டு . அதைக் கடக்கும்போது சத்தமில்லாமல் ஜனங்கள் செல்வார்கள் . அதுபோல இறந்துபோய் , மறைந்தும் மறையாமல் உருவிலிகளாக இருப்பவர்களை அவருடைய கதைகளில் காண்கிறேன் . அவர்கள் கண்விழித்துக் காட்டின் கடைக்கோடி வாசனையில் கதாபாத்திரங்களாகத் தோன்றிவருகிறார்கள் . எந்தக் காற்றில் யார் வருகிறார்கள் என்ற வியப்பில் வாசகர்களை வைத்து , கதையில் மாயத்தைத் தொடர்ந்து பூசிவருகிறார் சோ . தர்மன் . வள்ளி ஓடையை சோ . தர்மன் கடக்கவே இல்லை .
    எங்கள் நிலப்பரப்பில் உப்பாங்காத்து , குருமலைக்காத்து , கட்டும் ஆடையை உருவிவிடும் கயத்தாரிலிருந்து வரும் மேகாத்து என்று பல காற்றுகள் உண்டு . பெரும்பாலும் உப்பாங்காத்தில் மாட்டிக்கொண்டவர்கள்தான் சோ . தர்மனின் கதாபாத்திரங்கள் .
    சொல்லுதல் எல்லாம் ஆழ்மனப் படிமத்தைத் தொட்டு மறைவு மையால் எழுதியவை . கானல்நீரலையில் உருவழியும் வெப்பநிலக் கோடுகளில் சினைப்பட்ட நரியின் முனகல்கள் தர்மனின் கதைகளில் அரிச்சல்களாகக் கேட்பதை வாசிப்பில் நீங்களும் உணரலாம் .
    கோணங்கி
  • SAVE 7%
    Add to cart

    நீர்வளரி / Neervalari

    660 614
  • SAVE 7%
    Add to cart

    பண்டைத் தமிழ்ப் பண்பாடு / Pandai Thamizh Panpaadu

    350 326
    பண்டைத் தமிழ்ப் பண்பாடு / Pandai Thamizh Panpaadu
    சங்க இலக்கியம் தமிழரின் தொன்மை , பெருமை , அடையாளம் . இதைக் கீழடி நாகரிகம் பேசுகிறது . 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறது அது . இந்தத் தொன்மையிலிருந்து நாம் காணவேண்டிய கண்திறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல் , சங்க கால மக்களின் வாழ்வியல் தனித்துவமானது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை யாவற்றிலும் அவர்கள் வாழ்ந்தார்கள் ; ஐந்திணைகளிலும் பண்பாட்டை வளர்த்தார்கள் . சங்க காலத்தில் சாதி இல்லை ; ‘ குடி ‘ இருந்தது . பெண்கள் விவசாயம் செய்தார்கள் , தேன் வெட்டினார்கள் , கள் வார்த்தார்கள் . கொடிச்சி பாதீடு செய்தாள் . யாயும் ஞாயும் யாராகியரோ ‘ என்பது அக்கால உறவுமுறை : அம்மாவும் அப்பாவும் இல்லை . பழையோளை வணங்கினார்கள் . இவை யாவற்றையும் இந்த நூலில் சமூக அறிவியலாக்கி இருக்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி , இதைப் பண்டைத் தமிழரின் வாழிடங்கள் , சமூக அமைப்பு , குடும்பம் , திருமணம் , உறவுமுறை , ஐந்திணைப் பொருளாதாரம் , வழிபாடு , சமயம் , சடங்குகள் , கலைகள் , உணவு , போர் , வீரயுகம் , பாணர் , ஆரியமாதல் என வெவ்வேறு தலைப்புகளில் விவரிக்கிறார் நூலாசிரியர் , மனித குலத்தின் வரலாறு சங்க இலக்கியத்தில் குவிந்து கிடக்கிறது . அதை இந்தப் புத்தகம் ஒரு புதிய தடத்தில் வெளிச்சமிடுகிறது : மானிடவியலாக உரக்கப் பேசுகிறது . தன் வகைமையில் இதுவே முதல் நூல் , தமிழரின் அடையாளத்தை அறிவியலாக்கி இருப்பதே இந்த நூலின் சாதனை என்று கூறினால் , அது மிகையல்ல . இதுவே இந்த நூலை நீங்கள் மட்டுமல்ல , உங்களுடைய நண்பரும் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பதிமூனாவது மையவாடி / Pathimoonaavathu Mayyavaati

    320 298
    கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது . ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட . உடலை , காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல் . அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி : ” சீயோன் குமாரத்தியே , கெம்பீரித்துப்பாடு . இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள் . எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு . உன் ஆக்கினைகளை அகற்று . திறந்த உடலைக் களிப்பாக்கு .
    இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும் . பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல் , பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது . இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘ சமநிலையை பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள் . சோ . தர்மன் , ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘ வெள்ளந்தித்தனத்துடன் நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார் . ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஓட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார் .
    கருத்தமுத்து ஒரு ஆணாக , குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது . நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான் . ஒன்று கல்வி , இன்னொன்று மதம் , இணையாகவே காமம் , ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான் . இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான் .
    ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது .
    – ஜெயமோகன்