ஒரு சின்ன விதை ஒவ்வொரு சொட்டு ஈரத்தையும் பற்றிக் கொண்டு , முட்டிமோதி மண்ணைக் கிளர்ந்து , மேல்நோக்கி எழுந்து நின்றபின் , தான் முளைவிட்ட இடத்தில் வேர் கிளப்பி நிற்கத் துவங்குவது போல் இந்தநூல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வலுவாக்கிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன் .
இத்தொகுதியில் உள்ள ‘ மறவோம் ‘ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச் சிறந்த சிறுகதை மட்டுமல்ல , புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்தக் கதைகளில் ஒன்றும்கூட . இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலைக் கதைத்தளத்தில் நிகழ்த்தி , கதை முடிந்த பின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது . அவருடைய வெற்றி , நுண்ணிய அக அவதானிப்புகள் எளிதாக வந்து செல்வதில் உள்ளது .
நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தப் படைப்பு , எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை , பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவணக்குவியலாகவே நான் கருதுகிறேன் .
– கோலாலங்காட் அ.அரங்கசாமி , மலேசியா
அசுர வேகத்தில் நகரமயமாதலில் தொலைந்து போனதையே மறந்து போய்க் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் ஒரு பகுதியின் தடயங்களைப் பத்திரப்படுத்தியிருப்பதாய் தோன்றுகிறது . அதுவே இந்த நம்பிக்கையே இந்நாவலைக் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது .