Showing 1–16 of 44 results
-
Read more
ஆதி இந்தியர்கள் / Early Indians
₹350₹326இந்தியர்களாகிய நாம் யார் ? நாம் எங்கிருந்து வந்தோம் ? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக , பத்திரிகையாளர் டோனி ஜோசஃப் , வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார் . ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி , கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்குகிறது . அதற்குப் பிறகு , கி.மு. 7000 க்கும் கி.மு. 3000 க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர் . பின்னர் கி.மு. 2000 க்கும் கி.மு. 1000 க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர் .தொல்லியல் , மரபியல் , வரலாறு , வரலாறு , மொழியியல் , கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் , டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது , இந்திய வரலாற்றோடு தொடர்புடைய , மிகவும் சர்ச்சைக்குள்ளான , அசௌகரியமான கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார் . அவற்றில் சில : சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார் ?ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா ?மரபியல் ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா ?மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல் , நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு , நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது . அந்த உண்மை இதுதான் :நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம் ! நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம் ! -
Read more
ஆழ்மனத்தின் அற்புத சக்தி / The Power of Your Subconscious Mind
₹199₹185டாக்டர் ஜோஸப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற நூலாசிரியர் . அவர் பல ஆண்டுகாலம் இந்தியாவில் தங்கியிருந்து நம்முடைய தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் . உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர் , நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது , அதைக் கொண்டு நம் வாழ்வை பிரமிக்கத்தக்க விதத்தில் நம்மால் மாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத முடிவிற்கு வந்தார் .உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் பல நிகழட்டும் !இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே மிகப் பரவலாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது . உலகெங்குமுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவியுள்ளது .நீங்கள் எந்தவொரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும் , எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து , அதை உங்கள் னத்திரையில் படமாகப் பதிய வைத்தால் , உங்களால் உங்கள் ஆழ்மனத் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும் .வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிரம்பியுள்ள இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய நடைமுறை உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களால் அளவற்ற செல்வத்தைக் குவிக்க முடியும் , நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வைப் பெற முடியும் , அனைவருடனும் இணக்கமான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் , உங்களது திருமண பந்தத்தை என்றென்றும் இனிமையாக வைத்திருக்க முடியும் . உங்களிடம் உறைந்திருக்கும் அர்த்தமற்ற பயங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும் , ஒவ்வொரு வைகறையிலும் உங்களால் புத்துணர்ச்சியுடன் துயிலெழ முடியும் , வேண்டாத விருந்தாளிகளாய் உங்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எல்லா உடல் உபாதைகளையும் விரட்டியடிக்க முடியும் .டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ள , வாழ்வில் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய எளிய உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களுக்கும் உங்கள் மாபெரும் கனவிற்கும் குறுக்கே நிற்கும் மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உங்களாலும் வெற்றிநடை போட முடியும் . -
Read more
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி / Beyond the Power of Your Subconscious Mind
₹295₹274டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழ்மன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை . 1963 ல் ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து , ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன . அதோடு , இன்று நாம் வாழும் இவ்வுலகம் , சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது .டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து , ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே ‘ புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது ‘ என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிக்கொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன் . இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்த போது , இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன் . இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல் .திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன் . இதன் மூல நூலில் இடம்பெற்றிராத ‘ எப்படிச் செய்ய வேண்டும் ‘ என்பது போன்ற விஷயங்களையும் நான் இந்நூலில் சேர்த்திருக்கிறேன் . – முன்னுரையில் ஜேம்ஸ் ஜென்சன் -
Read more
இக்கிகய் / Ikkikai
₹350₹326எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது , அதாவது , தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத்துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது , என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர் .அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு , உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து , உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து , உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும் . அதாவது , நீங்கள் உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிக்க இந்நூல் உங்களுக்கு வழி காட்டும் .