Showing 49–64 of 144 results
-
Read more
கிருதயுகம் எழுக / Kirutha Yugam
₹200₹186வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும் . அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் . அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் ( 1921 – 2021 ) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை . பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும் . பாரதியின் எழுத்துக்களைப் படித்த பிறகு தாய்நாட்டைப் பற்றிய என் சிந்தனை வலுவடைந்தது . தேசியம் என்பதற்கான முக்கியத்துவம் புரியலாயிற்று .
-
Add to cart
சாதியின் குடியரசு / Sathiyin Kudiyarasu
₹350₹326ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர் . தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர் , தோழர் , விமர்சகர் , ஃபாசிசசக்திகளின் தாங்கவியலாத எதிரி . அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று . எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள் , அதன் தெளிவான வெளியீட்டுத் திறன் , வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண்டே அவர் தனது நண்பர்கள் , தோழர்கள் , எதிரிகள் அனைவரையும் பெற்றுள்ளார் . ‘ சாதி ‘ குறித்து அவரது ‘ நுண்மான் நுழைபுலம் கொண்ட ‘ சிந்தனை இந்த நூலின் பக்கங்களில் விரிகின்றது . காய்தல் உவத்தல் இல்லாத அவரது விமர்சனங்கள் , பார்வைகள் , அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்பவர்கள் குறைவாக இருக்கலாம் . ஆனால் ‘ சாதி ‘ குறித்து சிந்திக்கும் எவரும் தவிர்க்கவியலாத பேனா ஆனந்த் டெல்டும்டேயின் பேனா . பாரதி புத்தகாலய ஆசிரியர் குழு தன் பங்கிற்கு ஏற்பும் மறுப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கனத்த விவாதத்திற்கான சட்டகத்தையும் . இறைச்சிப் பொருளையும் வழங்கும் இந்நூலை தமிழில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது .
-
Add to cart
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு / Sindhanai Chirpi Singaravelu
₹200₹186இந்திய அரசியல் களம் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி , மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது ; விடுதலைப்போர் அரிய பல சிந்தனையாளர்களை , செயல் வீரர்களை , தலைவர்களை , தியாகிகளை உருவாக்கியது . அன்றைய ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியும் தொடர்ந்த லெனின் தலைமையும் ‘ புதியதோர் உலகு ‘ செய்யப் புறப்பட்ட போராளிகளுக்கு ஆதர்சமாயிற்று . இந்தச்சூழலில் வெளிப்போந்தவர் தோழர் சிங்காரவேலர் . தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் போற்றப்படும் இவர் , தன் ஆழ்ந்த புலமை தேடிப் பெற்ற மார்க்சியப் பேரறிவு , விரிந்த ஆய்வுத்திறன் , ஏற்றுக்கொண்ட உயர் நோக்கங்களில் உறுதி ஆகியவற்றின் துணை கொண்டு ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர் .