Showing 49–64 of 106 results
-
Add to cart
தமிழர் நாட்டுப் பாடல்கள் / Thamizhar Nattup Padalgal
₹475₹442தமிழக நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளது . தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் வாழ்க்கையின் பல கோணங்களையும் , அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . சிறப்பிற்கும் பாராட்டிற்குமுரிய அரியவகையிலான இம்முயற்சி கலைஇலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாகும் .
தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் , கேரளப் பல்கலைக் கழகத்திலும் , தமிழ்த் துறையில் இந்நூல் மூலநூலாக பயன்பட்டு வருகிறது . ஆசிரியர்களும் , ஆய்வாளர்களும் , தமிழக நாட்டுப்பாடல் துறையில் இது சிறந்த நூல் என மதிக்கின்றார்கள் . -
Add to cart
திப்புவின் வாள் / Tipuvin Vaal
₹285₹265திப்புவின் அறியப்படாத வரலாற்றை , அவர் சந்தித்த சவால்களை , வெற்றிகளை , துரோகத்தை , அதன் பின்னிருந்த திப்புவின் மனத்துணிச்சலை வெளிப்படுத்துகிறது பகவான் கித்வானியின் திப்புவின் வாள் .இது கற்பனையான வரலாற்று புதினமில்லை . வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும் . இந்த நாவலை அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது . தமிழ் வாசகன் திப்புவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப்போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்எஸ்.ராமகிருஷ்ணன் -
Read more
தெரியப்படாத திண்டுக்கல் / Theriyappadatha Dindigal
₹120₹112திண்டுக்கல் மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகளையும் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்ப்பகுதிகளின் பெருமையையும் வரலாற்றுத்தரவுகளின் ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கும் இந்நூல் திண்டுக்கல் மாவட்டக் களஞ்சியமாக அமைந்துள்ளது .திண்டுக்கல் மலைக்கோட்டை , கொடைக்கானல் , வத்தலக்குண்டு , நத்தம் , காந்திகிராமம் , பழனி என இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றிய அரிய தகவல்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் சமூகச்சூழலையும் வரலாற்றுப் பார்வையோடு அணுகும் இந்நூல் திண்டுக்கல் மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் .