Showing 49–64 of 79 results
-
Read more
நிலவறைக் குறிப்புகள் / Nilavarai Kurippugal
₹250₹233ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் செல்ல வேண்டுமென்றால் , ‘ இது மனிதஇயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் .– கோபிகிருஷ்ணன் -
Add to cart
பார்த்தீனியம் / Partheeniyam
₹450₹419அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது . யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது . அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம் . யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது . மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது . தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல் கிறது . காதலை , நட்பை , உயிர் கலந்த உறவுகளை , சமூக நேசத் தையும் சீரழித்த , கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி . உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும் . –பிரபஞ்சன் -
Add to cart
புறப்பாடு / Purappadu
₹380₹353அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது . சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம் . கடிகாரக் காலம் . அது அர்த்தமற்றது . அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது .அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே . அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன . நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன் . அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும் . அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டு வருகிறதோ அதை எழுதிச் செல்வேன் . அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில் ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன் .ஜெயமோகன் -
Read more
மகாபாரதம் / Mahabharatam
₹300₹279பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை . அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் , பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார் . பலராலும் வஞ்சிக்கப்பட்ட கர்ணனை அனுதாபத் துடன் பார்க்கிறார் . அதேசமயம் , கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . குந்தி , காந்தாரி , மாத்ரி , சத்யபாமா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார் . பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார் . போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார் . கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார் . கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார் . அர்ச்சுனன் , சாத்யகி , அசுவத்தாமன் , குந்தி , பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார் . வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையையும் பிரமிப்புடன் பார்க்கிறார் . இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம் .அரவிந்தன்இந்து தமிழ் நாளிதழ் – மதிப்புரை .