Showing 1–16 of 79 results
-
Add to cart
அசடன் / Asadan
₹1,250₹1,163சிறந்த மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத்தோட்ட விருது , நல்லி திசை எட்டும் விருது , ஜி.யூ. போப் விருது வென்ற மகத்தான நாவல் “எனக்கு இருபத்தேழு வயதாகிறது .. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன் . என்னுடைய பாவனைகள் எல்லாமே எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன . எதை எப்படி எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை . அதுதான் முக்கியமான விஷயம் .. ” என்று தன்னைக் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மிஷ்கினே அளித்தபோதும் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை . அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா , ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதில்தான் இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது .எம்.ஏ. சுசீலா -
Read more
ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? / Aathikka Saathikaluku Mattume Avar Periyaaraa?
₹400₹372தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும் . தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் ” என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது ( 1925 ) முதல் ….இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு ( 1973 அக்டோபர் 20 ) ஆளானது வரை …தந்தை பெரியார் பேசியது , எழுதியது , செயல்பட்டது அனைத்தும் , எல்லாத் தமிழ் மக்களுக்குமே .அதை உணராமல் , அவரைப் படிக்காமலேயே , ‘ ஈ.வெ.ரா. தலித் விரோதி , ஆதிக்க சாதிகளுக்கான பெரியார் ‘ என நிறுவ முயற்சிக்கும் அபத்த களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல் .குடி அரசு , விடுதலை இதழ்களின் 75 ஆண்டு பதிவுகளையே ஆதாரமாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது . ஈரோட்டுக் கண்ணாடி மூலமாக இருபதாம் நூற்றாண்டுச் சமூக நிலையைக் காட்டும் புத்தகம் இது !