Showing 49–64 of 71 results
-
Add to cart
தாந்தேயின் சிறுத்தை / Danteyin Chiruthai
₹340₹316கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது . ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது . அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது . கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார் . வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார் . மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன .
-
Read more
தேகம் / Thegam
₹250₹233இன்றைய சினிமா , சிறார்களின் வீடியோ விளையாட்டுக்கள் , பத்திரிகைகள் , செய்தித்தாள்கள் , அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறை தான் அதன் அடியோட்டமாக இருக்கிறது . மொழி , நாகரிகம் , பண்பாடு , கலாச்சாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது ? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான் ? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது ? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன ? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம் . மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம் . 1947 – இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை ? ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே- அவர்களில் கலைஞர்களும் , கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம்- முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே , அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது ?
-
Add to cart
நீருக்கடியில் சில குரல்கள் / Neerukkadiyil Sila Kuralgal
₹150₹140ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர் , கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன் . புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது . சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது .அதற்கு அவர் தோது பண்ணியிருக்கும் வார்த்தைகள் இயல்பான அவரது புழங்குமொழிதான் . அந்த மொழியே கதைமாந்தர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்பகப்படுத்துகின்றன .வெவ்வேறு ஆண் பருவத்தினரான மூவர் சுற்றிய கதை . அவர்களின் வாழ்வியல் நிலைகளை குறிப்பாக வெவ்வேறு பாலியல் களங்களில் காட்சிப்படுத்துகிறது .கதையில் உலவும் பெண்களின் அபூர்வ வேட்கை பிரபு காளிதாஸின் எழுத்தில் காமலோகத்தை சித்திரப்படுத்தி மலைப்பூட்டுகிறது . மாறுபட்ட சூழலில் பிழைக்கவே .. தப்பிப்பிழைக்கவோ ஓடிக்கொண்டிருக்கும் மூவரும் ஒன்றுகூடுவதுடன் கதை ஓரிடத்தில் நிலைபெறுகிறது .எஸ் . அர்ஷியா -
Add to cart
மாக்பெத் / Macbeth
₹350₹326ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும் , ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும் , இதற்கு முன்பே ஹாம்லெட் , லியர் அரசன் என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும் , தமிழை இயல்பாக , லாவகமாக , உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள் . இவற்றை ஆட்சியோடு கையாளுவதால் , மாக்பெத் என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக , ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது .ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள் , இடர்பாடுகள் , இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார் . அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம் ; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம் ; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம் ; அதன் பெருமையை , அதன் சிறுமையைக் காண்கிறோம் . பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம் . இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு , கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம் . இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர் .பேராசிரியர் அ . சீநிவாசராகவன் -
Add to cart
முள்ளம் பன்றிகளின் விடுதி / Mullampanrikalin Viduthi
₹170₹158கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும் , இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால் அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது . இக்கதைகள் இவை எழுதப்பட்டுள்ள genre- இல் இதற்கு முந்தைய எந்த எழுத்தாளரையும் பின்பற்றியிருக்கவில்லை ; அவர்களது பாணியைத் தொடரவில்லை என்பது இத்தொகுதியின் ஆகப் பெரிய பலம் . அந்த வகையில் இக்கதைகள் தமிழுக்கு மிகவும் புதியவை . எதார்த்த வகைக் கதை சொல்லலுக்கான காலம் முடிந்து விட்டது என்கிற மகத்தான செய்தியைத் தன்னுடைய அதிசாகசப் புனைவுகளாலும் விஞ்ஞானக் கற்பனைகளாலும் அமானுஷ்யமான சம்பவங்களாலும் பறைசாற்றுகிறது முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்புசாரு நிவேதிதா -
Add to cart
ரஜினிகாந்தின் சூரிய மேடு / Rajinikanthin Sooriya Medu
₹225₹209நான் நமீதாவைச் சந்தித்தது பற்றி எழுதிய போது அவரை ஒரு வரி வர்ணித்ததும் அதை ஏதோ ஈவ் டீசிங் லெவலுக்குக் கொண்டு சென்றார்கள் . ஆனால் குஷ்வந்த் சிங் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அழகைப் பற்றியே வர்ணித்திருக்கிறார் . ஆக , தமிழர்களின் பொதுவான சிடுமூஞ்சித்தனத்துக்கு பத்தி எழுத்தே ஆகாதோ என்றுகூடத் தோன்றுகிறது . ஒரு பத்தி எழுத்தாளர் என்பவர் மிகவும் வண்ணமயமாள நபராக இருக்க வேண்டும் . இந்தத் தொகுப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் .– சாரு நிவேதிதா