Showing 17–32 of 77 results
-
Read more
கனவுகள் ஓடும் நாளங்கள் / Kanavugal Odum Nalangal
₹140₹130ஒவ்வொரு படைப்பாளிக்கும் அகம் உணரும் தருணம்தான் படைப்பின் உச்சம் , வாழ்வின் உச்சமும் கூட . தன்னை மட்டுமல்லாமல் மறு இதயங்களின் வலியையும் மென் உணர்வுகளையும் உணரும்போது ஒரு சாமானியன் படைப்பாளியாகிறான் ஜானு பல கவிதைகளில் அப்படியான நொடிகளை தாண்டிச் செல்கிறார் . இடறி விழுந்த பறவையின் காயத்தை மயிலிறகென வருடித் தேற்ற பறவையின் பாஷை தெரிந்திருக்க வேண்டியதில்லை , வலி உணரும் மனம் போதும் என்று நம்மை உணர வைக்கும் ஜானுவின் எழுத்துக்கள் பெண்ணியக்குரலின் வறட்சியற்று அதே சமயம் தன் நிலைபாட்டை உறுதியாய் பதிவு செய்கிறது . உங்கள் தேவதைப் பட்டங்கள் எனக்கு வேண்டாம் , என் சிறகுகளே போதும் என்று நம்பிக்கையும் தெளிவும் துளிர்க்க பேசுகிறார் . ஜானு , நிச்சயமாக இனி வரும் நாட்களில் உங்களின் அதி தீவிரமான கவிதைகளை நீங்கள் பதிவு செய்யக்கூடும் . அதற்கான எல்லா துளிர்களும் உங்களின் மரத்தில் துளிர்க்கத் தொடங்கிவிட்டன . இனி வருவது வசந்த காலமே . அதன் வழி வீசும் குளிர்க் காற்றை சுவாசிக்க நானும் காத்திருக்கிறேன் .
-
Read more
காதலே கதி மோட்சம் / Kathale Kathi Motcham
₹120₹112இவரது இயற்பெயர் T. கார்த்திக் . திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சியில் வசிக்கிறார் . தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருக்கிறார் . முகநூலில் யாத்திரி ( HTTPS://WWW.FACEBOOK.COM/KARTHIKT1986 ) என்ற புனைப்பெயரில் 2010 ம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார் . பெரிதாக முகநூல் தாண்டி பொதுவெளியில் அறியப்படாதவர் . இது அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு . காதல் மற்றும் காதலின் மன ஊடாட்டங்களைப் பற்றியும் பிரிதலைப் பற்றியும் எழுதுவது அவருக்குப் அவருக்குப் பிடித்தமான ஒன்று . பிரிதலின் புரிதல் குறித்து அடிக்கடி எழுதக் காரணமாக அவர் சொன்னது – ” காதலிக்க மறுத்த பெண்ணை , காதலில் இருந்து விலகிய பெண்ணை , கத்திக்குத்து , கொலை , திராவகம் வீச்சு , என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம் . அன்பின் உச்சம் வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும் . அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும் . மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை விட்டுப் பிரிந்த பெண்ணை உளமார ஆசிர்வதிக்குமெனும் நப்பாசை . அதனால் எழுதுகிறேன் ” என்கிறார் . அவர் ஆசை நிறைவேறட்டும் .
-
Read more
கிராம கீதா / Graama Geetha
₹335₹312சந்த் துகடோஜி மகராஜ் 1909 – 1968 : மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா ( அன்றைய மத்தியப்பிரதேசம் ) பகுதியில் யாவளி என்ற ஊரில் பிறந்தார் மாணிக்தேவ் . முறையான கல்வி பயிலாத மாணிக் சாதுக்களோடு சுற்றி அலைந்து மக்களிடம் கல்வி , விவசாயம் , சுகாதாரம் , பக்தி போன்ற விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி துகடோஜி மகராஜ் என்று புகழ்பெற்றார் . பல நூல்களைக் காவியமாக இயற்றினார் . அவர் இயற்றிய நூல்கள் பெரிய பண்டிதர்களால் , தேசத்தலைவர்களால் பாராட்டபெற்றவை . இவை குடத்துக்குள் கடல் போல் அறிவுக்களஞ்சியங்கள் என அறியப்படுகின்றன .கிராம கீதா : கிராமங்களின் அவல நிலை , கல்வியின்மை , ஏழ்மை மற்றும் பின் தங்கிய சமுதாயம் – இவை அனைத்தும் கண்ட துகடோஜி , நிலைமையை மாற்ற வழியை இக்காவியத்தின் மூலம் கூறுகிறார் . விவசாயத்தில் துவங்கி , கல்வி , கூட்டுறவுச் சங்கம் , கிராமப் பஞ்சாயத்து , பள்ளிக்கூடங்கள் , மகளிர் முன்னேற்றம் , சுத்தம் , சுகாதாரம் என்று மனித வாழ்க்கை முன்னேறத் தேவையானவற்றை இதில் காணலாம் .விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் : தமிழ் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் சிறுகதை மற்றும் நாவல்கள் படைத்து , பரிசுகளும் பெற்றுள்ள விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் , அகில இந்திய வானொலியில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . ” ஆலமரம் ” என்கிற புதினம் இவரின் சிறந்த படைப்பு , பல பரிசுகள் பெற்றுள்ளது . -
Add to cart
சிப்பத்தில் கட்டிய கடல் / Sippathil Kattiya Kadal
₹180₹167எளிமையே ஆகப் பெரும் சிரமத்தை தரும் . ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன . ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அக உணர்ச்சிகளை எளிய அவரின் ஆளுமை வெளிப்படுகிறது . சங்கக் கவிதைபோல ஒரு ஒற்றைக் காட்சியைக் சத்தமில்லாமல் காட்டிவிட்டு சென்றுவிடுகிறார் . பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும் . இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார் .‘ பொட்டு மூக்குத்திபோலப் பூத்திருக்கும் வயலட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லை அதன் இலைகள் இப்படித்தான் நடந்துவிடுகிறது பல நேரம் ‘பாருங்கள் . அவ்வளவுதான் முடிந்துவிட்டது கவிதை . இது பூவையும் இலையையும் பற்றியதா என்ன . யாரை பற்றியது . எந்த உறவைப் பற்றியது . ஆர்ப்பாட்டம் இல்லை . மதர்த்த சொற்கள் இல லை இருண்மை இல்லை . எந்த படாடோபமும் இல்லை . ஆனால் சொல்லாமல் சொல்லி ஒன்றை உணர்த்திவிடுகிறதே .ரவிசுப்பிரமணியன் -
Read more
ஞானக்கூத்தன் கவிதைகள் / Naanakkuuttan Kavitaikal
₹895₹832ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது . தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது . அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள் , புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது .ஆனந்த்