Showing 1217–1232 of 1276 results
-
Read more
தமிழர் பண்பாடும் தத்துவமும் / Tamilar panpaadum thathuvamum
₹200₹186முன்னுரையிலிருந்து …பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘ தமிழர் பண்பாடும் , தத்துவமும் ‘ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் . இந்நூல் , பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது . ‘ பண்பாடு ‘ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு , பரி பாடலில் முருக வணக்கம் , கலைகளின் தோற்றம் , உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன .‘ பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள் ’ என்னும் தலைப்புள்ள கட்டுரை , பொருள்முதல் வாதத்தை ( உலகாயதக் கொள்கையை ) ஆராய்கிறது . வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர் . ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை . திரு நா . வானமாமலை அவர்கள் , தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார் .பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை . சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள் , அறிவுக்கு விருந்தாக உள்ளன . இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில . பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன் .சீனி வேங்கடசாமி … -
Add to cart
தமுரு / Thamuru
₹220₹205இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும் , ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும் , காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது .
-
Add to cart
தாந்தேயின் சிறுத்தை / Danteyin Chiruthai
₹340₹316கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது . ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது . அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது . கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார் . வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார் . மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன .
-
Read more
தேகம் / Thegam
₹250₹233இன்றைய சினிமா , சிறார்களின் வீடியோ விளையாட்டுக்கள் , பத்திரிகைகள் , செய்தித்தாள்கள் , அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறை தான் அதன் அடியோட்டமாக இருக்கிறது . மொழி , நாகரிகம் , பண்பாடு , கலாச்சாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது ? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான் ? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது ? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன ? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம் . மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம் . 1947 – இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை ? ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே- அவர்களில் கலைஞர்களும் , கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம்- முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே , அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது ?