Showing 1057–1072 of 1276 results
-
Read more
ரெவல்யூஷன் 2020 / Revolution 2020
₹199₹185முன்னொரு காலத்தில் , இந்தியாவின் ஒரு சின்ன டவுனில் இரண்டு புத்திசாலிப் பையன்கள் வாழ்ந்து வந்தார்கள் .ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் பணம் சம்பதித்தான் . ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் புரட்சியை ஆரம்பித்தான் .பிரச்சனை என்ன என்றால் , இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர் .ரெவல்யூஷன் 2020 க்கு உங்களை வரவேற்கிறோம் . இது பிள்ளைப்பருவ நண்பர்களின் கதை கோபால் , ராகவ் மற்றும் ஆர்த்தி ; எல்லோரும் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள் . காதலையும் , சந்தோஷத்தையும் வாரணாசியில் தேடுகிறார்கள் . ஆனால் , இவையெல்லாம் எளிதில் கிடைப்பதில்லை . நியாயமற்ற சமுதாயம் , ஊழல்காரர்களுக்குப் பரிசளிக்கிறது . கோபால் ஊழலுக்கு அடிபணிகிறான் . ராகவ் எதிர்த்துப் போராடுகிறான் , யார் வெற்றி கண்டார்கள் ?பெஸ்ட் ஸெல்லிங் ஆசிரியர் – ஃபைவ் பாயிண்ட் ஸம் ஒன் , ஒன் நைட் அட் தி கால்ஸெண்டர் , தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் , 2 ஸ்டேட்ஸ்- சேதன் பகத்திடமிருந்து மற்றும் ஒரு பிடிப்புள்ள கதை , இந்தியாவின் அடிமனதிலிருந்து உதித்தது . நீங்கள் புரட்சிக்குத் தயாரா ? -
Read more
லியோ டால்ஸ்டாய் கதைகள் / Leo Tolstoy Kadhaigal
₹140₹130லியோ டால்ஸ்டாய் என்று அழைக்கப்படும் இவர் 1828 இல் பிறந்தார் .டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவே இருந்தது . டால்ஸ்டாய் படிப்பில் சூட்டிகையானவராக இருக்கவில்லை .ஆனால் இவருக்கு தனது தாய் மொழியான ருஷ்ய மொழி தவிர பிரெஞ்சு , ஆங்கிலம் , ஜெர்மன் , போலீஷ் , செக் , பல்கேரியா , டாடார் . இத்தாலி , அராபி , டச்சு , இலத்தீன் , கிரேக் , ஹெப்ரியூ இந்த மொழிகளிலும் நல்ல தேர்ச்சி இருந்தது . அதனால் இம்மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை யெல்லாம் வாசிக்கும் பேறு பெற்றார் . அவற்றை ஆராயவும் செய்தார் .தான் கற்றறிந்த , கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார் . ஆனால் அவர் வாழ்க்கை முள் பாதையாகத்தானிருந்தது . ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார் .டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர் . ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள் .‘ உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் ‘ என்றார் புத்தர் .இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார் .உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் டால்ஸ்டாய் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை , ஐம்பது வருடங்களை இலக்கியப் பணிக்கென்றே அர்ப்பணித்தார் . கதைகள் , குட்டிக்கதைகள் , புதினம் , நாடகம் , கட்டுரை என்று இவர் தடம் பதிக்காத துறையே இல்லை .அவருடைய நீதிக்கதைகளில் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன . சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழத்தக்க அருமையான பொக்கிஷம் அவரது கதைகள் என்றால் மிகையாகாது , நீங்களும் இவற்றைப் படியுங்கள் . மகிழுங்கள் . -
Read more
லீ குவான் யூ / Lee Kuan Yew
₹244₹227லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில் . அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை . ஆனால் விளையாட்டுத்திடல் , பேருந்து , உணவுவிடுதி , வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டு லீ கொதித்தார் . என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும் , நாகரீகமும் , பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்துகொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது . பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு , இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும் , வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையையூட்டியது . சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சி , ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை . அதற்காக கம்யூனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை . மாற்று அரசியலை முன்வைக்க முடிவுசெய்து மக்கள் செயல் கட்சியை ( Peoples Actions Party ) நிறுவி ஆட்சியைப் பிடித்தார் . 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாக மாற்றியமைத்தார் . சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையப் புள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான் . நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக்கொண்டிருக்கிறது .
தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ . அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது . லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கைத் தொடங்கி அவருடைய கல்வி , அரசியல் நுழைவு , அவருடைய இலக்கு , அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள் , அவருடைய கம்யூனிச எதிர்ப்பின் பின்னணி , தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம் . -
Read more
வந்தார்கள் வென்றார்கள் / Vanthargal Vendrargal
₹330₹307பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து , பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை , வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜூனியர் விகடனில் ஐம்பத்து மூன்று வாரங்கள் தொடராக வெளிவந்தபோது , லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்போடும் சிலிர்ப்போடும் படித்து ரசித்தார்கள் . மதன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் முடிந்தபோது ‘ அடடா ! முடிந்துவிட்டதே … தொடரக்கூடாதா .. ? ‘ என்று நினைத்தவர்களே அதிகம் . ஆனந்த விகடனில் 1970 – ல் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்து விகடன் நிறுவனத்தின் ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் , ஜூனியர் போஸ்ட் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இணை ஆசிரியராகப் பணியாற்றினார் . மதனின் முழுப்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் . மனைவி ஜெயந்தி . இந்தத் தம்பதிக்கு திவ்யா , அமிதா என்று இரு மகள்கள் உண்டு . மதனின் பள்ளிப் பருவம் சென்னையில் …. திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி . கல்லூரிகள் : விவேகானந்தா , சென்னை மாநிலக் கல்லூரி . கல்லூரியில் அவர் படித்த சப்ஜெக்ட் சரித்திரமல்ல , பௌதீகம் என்பது குறிப்பிடத்தக்கது !