Showing 193–208 of 1276 results

  • SAVE 7%
    Add to cart

    இந்து இந்தி இந்தியா / Inthu Inthi Inthiya

    300 279

    இந்து வகுப்புவாதத்தை சங் பரிவாரமும் பாஜகவும் மட்டுமே வளர்க்கவில்லை ; காங்கிரஸ் கட்சியிலும் இந்திய தேசியவாதத்திலும் தொடக்க காலத்திலேயே காணப்பட்ட இந்து வகுப்புவாதத்தைப் பட்டேல் முதல் சோனியா காந்திவரை பேணிப் பாதுகாத்துவந்துள்ளதை இந்த நூல் சொல்கிறது . காந்தியும் நேருவும் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது ; இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கியக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் வட இந்திய இந்துப் பெருமுதலாளிகள் ; பார்ப்பன – பனியா மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட செயற்கையான இந்தி ஆட்சிமொழியாக து ; அரசு விவகாரங்களில் மதம் தலையிடாத , அனைத்துத் தேசிய இனங்களும் முழுமையான தன்னாட்சி பெற்ற புதிய இந்தியா தேவைப்படுகிறது போன்றவை இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன . ஜனநாயகம் , மதச்சார்பின்மை , பன்முகத்தன்மை ஆகியவற்றில் அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்துத்வ இயக்க வரலாறு / Hinduthuva Iyakka Varalaru

    999 929
    இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் , மதச்சக்தியாகத் திகழும் இந்துத்வத்தின் வரலாறு .
    இந்துத்வ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது . திலகர் , சாவர்க்கர் , ஹெட்கேவார் . கோல்வால்கர் , சியாமா பிரசாத் முகர்ஜி , தீனதயாள் உபாத்யாயா , வாஜ்பாய் , அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது .
    இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர , அவசியத் தேவை . அதனை உணர்ந்து , சிப்பாய் புரட்சி , இந்து மகா சபாவின் ஆரம்பம் , ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய் , இந்தியப் பிரிவினை , ஜனசங்கத்தின் உருவாக்கம் , எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள் , ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம் , பாஜக உருவான கதை . ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம் .
    காந்தி படுகொலை , காமராஜர் கொலைமுயற்சி , மீனாட்சிபுரம் மதமாற்றம் , மண்டைக்காடு கலவரம் , ரத யாத்திரை , பாபர் மசூதி இடிப்பு , பொடா சட்டம் , கோத்ரா ரயில் எரிப்பு , குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம் . இந்துத்வ அரசியலின் எழுச்சி , வீழ்ச்சி , மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது .
    இந்திய , தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர் . முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது .
    தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான அயோத்தி … ஆர்.எஸ்.எஸ் .. இந்துத்வா தொடரின் நூல் வடிவம் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனப்படுகொலைகள் / Inapadukoligal

    140 130

    எதுவெல்லாம் இனப்படுகொலை ? ஓர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது , . குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது . ஓர் இனத்தின் மக்களை உடலாலும் , உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து , அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து , வாழும் இடத்தை விட்டு அகற்றுவது ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த கவடே தெரியாமல் அழிப்பது . – போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி , போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது . பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை , பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை , அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனி எல்லாமே நீயல்லவோ / Ini Ellamay Nee Allavo

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனி எல்லாம் சுகமே / Iniyellam Sugamey

    180 167
  • SAVE 7%
    Add to cart

    இனிப்பு தேசம் / Inippu Dhesam

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இன்றைய இந்தியா / Indraiya India

    700 651
    ஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத் . இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் . எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர் . இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது .
    இந்த நூலுக்குப் பலவகைச் சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு . ஒன்று இந்த நூல் அக்காலத்தில் ஒவ்வொரு போராளி கையிலும் திகழ்ந்தது . இந்தியா அல்லாத வேறு பல நாடுகளில் பணியாற்றிவந்த விடுதலை இயக்கங்களுக்கும் இது ஓரளவு வழிகாட்டி நூலாகவும் இருந்தது . மற்றொன்று இந்திய வரலாற்றை மக்கள் வரலாறாகக் காணவேண்டும் என்னும் கோட்பாட்டுக்கு அடிக்கல் நாட்டியது . நாடு விடுதலை பெற்ற அறுபதாண்டுகளில் பொருளாதார , சமூக ஆய்வு நூல்கள் எண்ணிறந்தவை வெளிவந்துள்ளன . அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக , வழிகாட்டியாக விளங்குவது இந்நூல் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரகசியம் / The Secret

    399 371
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் இடம் / Irandam Idam

    190 177
    ‘ ஞானபீடம் ‘ விருது பெற்ற ‘ இரண்டாம் இடம் ‘ என்னும் இந்த மலையாள நாவல் ‘ கங்குலுயின் பாரதம் ‘ மற்றும் ‘ ஜெயம் ‘ என்னும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும் . அபரிமித கற்பனையையும் , மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து , மனித குண இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களைப் படைத்து , பீமனின் பார்வையில் , பீமனே சொல்வது போல் , வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்புத் தன்மையாகும் . இதுவரையில் படித்துள்ள மகாபாரதக் கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபாடுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம் .
    மலையாள மொழியின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் நாயர் இதன் ஆசிரியர் . சாகித்திய அகாதெமி விருது , கேரள சாகித்திய அகாதெமி விருது , ஞானபீட விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர் . மலையாள வார இதழான ‘ மாத்ருபூமி’யின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் . தற்போது கேரள சாகித்திய அகாதெமியின் தலைவராக இருந்து வருகிறார் . ‘ காலம் ‘ , நாலு கட்டு ‘ , ‘ அகர வித்து ‘ போன்ற சிறந்த நாவல்களைப் படைத்தவர் . பெருந்தச்சன் ‘ , ‘ ஒரு வடக்கன் வீர சுதா ‘ போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியவர் .
    குறிஞ்சிவேலன் சுமார் 35 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணிச் செய்து வருகிறார் . 20 நூல்களுக்கு மேல் மலையாள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார் . எஸ்.கே. பொற்றெக்காட்டின் ‘ விஷ கன்னி ‘ என்னும் நாவலை மொழியாக்கம் செய்தமைக்காக 1994 – ம் ஆண்டில் மொழியாக்கத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . பல இலக்கிய அமைப்புக்களின் பாராட்டுக்களையும் , விருதுகளையும் பெற்றவர் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் உலக யுத்தம் / Irandaam Ulaga Yuththam

    390 363
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் சுற்று / Irandam Suttru

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டு தந்தையர் / Irandu Thanthaiyar

    200 186