Showing 113–128 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    நாயனம் / Naayanam

    225 209
  • SAVE 7%
    Add to cart

    நாய்சார் / Naaisir

    140 130
    மூற்றத்தில் , கூடத்தில் , தாழ்வாரத்தில் , திண்ணையில் விளைந்தவை என் கதைகள் . என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள் . சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது . என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள் . அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை .
    கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன் . பாதசாரிகளுக்குத் திண்ணைகள் தேவை . ஆசுவாசமாய் அமர்ந்து கொள்ளவோ , ஒரே நீட்டாய் நீட்டி விட்டுக் கொள்ளவோ திண்ணைகள் அவ்வளவு இதம் .
    இத்தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்கள் . கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு துளி வாஞ்சை அவர்கள்மேல் உண்டானால் அதுவே என் கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்வேன் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாவல் பழ இளவரசியின் கதை / Naaval Pazha Ilavarasiyin Kathai

    250 233
    அவர்கள் இருட்டும் முன்பு , காட்டைக் கடந்தாக வேண்டும் . சதுப்பு நிலம் போன்று தரை , கால் உள்வாங்கியது . ஆபத்தான வெளி , சருகுகள் குப்பைகள் மூடி , மண்ணில் முகம் மறைந்து கிடந்தது . அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன் . அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான் . பெரியவன் வைத்த காலடிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன் .
    போட்ட அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான் . கார்கோடன் , அதன் சந்ததியர் படுத்துக்கிடக்கும் . ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் . என்னத்துக்கு ஓய்வு என்றால் சண்டை களைப்புதான் . பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுனனும் அவர்கள் பந்துமித்திரர்களோடு கார்கோடன் வம்சத் தாரோடு சண்டைக்கு வந்தார்கள் . காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ்ணன் , அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது . கார்கோடன் , மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு சொன்னான் . இந்த மலை போல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப கோடி வருஷங்களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம் . அதனால் இது எங்கள் பூமி என்றான் . யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை . சண்டை பல ஊழிகள் தொடர்ந்தது . இன்னும்தான் …
    -நூலிலிருந்து
  • SAVE 7%
    Add to cart

    நிஜத்தைத் தேடி / Nijathai Thedi

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நின்னினும் நல்லன் / Ninninum Nallan

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீர்ப்பழி / Neerpazhi

    500 465
    கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள் , பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள் , நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்களை சோ . தர்மனின் கதைகளில் காணலாம் .
    சொல்கதையில் உள்ள கனவுப் புனைவும் எதார்த்தமும் சேர்ந்தவை சோ . தர்மனுடையது . ஊரின் மண்ணாலான குரல்வளையைக் கோதி , அவர் தம் கதைகளைக் காத்து நிற்கிறார் . நடுமதியத்தின் உலர்ந்த நில வெளியில் இயற்கையில் படிந்திருக்கும் ஆவியரோடு மரக்கிளைகளில் மறைந்திருக்கும் சிற்றூர்களை எழுதிய கலைஞனாக நான் அவரைப் பார்க்கிறேன் .
    இந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன .
    கருப்பு மண்ணில் , இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஓடையைக் கடக்க முயன்று இறந்துபோன வள்ளியின் பெயராலான ஓடை ஒவ்வொரு ஊரிலும் உண்டு . அதைக் கடக்கும்போது சத்தமில்லாமல் ஜனங்கள் செல்வார்கள் . அதுபோல இறந்துபோய் , மறைந்தும் மறையாமல் உருவிலிகளாக இருப்பவர்களை அவருடைய கதைகளில் காண்கிறேன் . அவர்கள் கண்விழித்துக் காட்டின் கடைக்கோடி வாசனையில் கதாபாத்திரங்களாகத் தோன்றிவருகிறார்கள் . எந்தக் காற்றில் யார் வருகிறார்கள் என்ற வியப்பில் வாசகர்களை வைத்து , கதையில் மாயத்தைத் தொடர்ந்து பூசிவருகிறார் சோ . தர்மன் . வள்ளி ஓடையை சோ . தர்மன் கடக்கவே இல்லை .
    எங்கள் நிலப்பரப்பில் உப்பாங்காத்து , குருமலைக்காத்து , கட்டும் ஆடையை உருவிவிடும் கயத்தாரிலிருந்து வரும் மேகாத்து என்று பல காற்றுகள் உண்டு . பெரும்பாலும் உப்பாங்காத்தில் மாட்டிக்கொண்டவர்கள்தான் சோ . தர்மனின் கதாபாத்திரங்கள் .
    சொல்லுதல் எல்லாம் ஆழ்மனப் படிமத்தைத் தொட்டு மறைவு மையால் எழுதியவை . கானல்நீரலையில் உருவழியும் வெப்பநிலக் கோடுகளில் சினைப்பட்ட நரியின் முனகல்கள் தர்மனின் கதைகளில் அரிச்சல்களாகக் கேட்பதை வாசிப்பில் நீங்களும் உணரலாம் .
    கோணங்கி
  • SAVE 7%
    Add to cart

    நீலப்பசு / Neela Pasu

    250 233
    லதானந்தின் கதைகள் அருவிபோல விழுந்து , வனங்களில் புகுந்து , சமவெளிகளில் பாய்ந்தோடும் ஆறுகள் போன்றன . கதைகளில் அவரது அனுபவங்களுடன் , கதைமாந்தர்கள் அனைவரும் மண்ணின் மொழி பேசி உலவிக்கொண்டிருப்பார்கள் . காரணம் , லதானந்த் பணியாற்றிய வனத்துறையும் , அவருடன் பழகிய மனிதர்களும்தான் .
    வனத்துறை அதிகாரியாக காடுகளில் பயணித்து , காட்டுநடப்பும் , நாட்டுநடப்பும் அறிந்தவர் என்பதால் வனவிலங்குகள் , அருவிகள் , மரம் , செடிகொடிகளையும் , அதையொட்டி வாழும் பழங்குடிமக்களின் இயல்புகளையும் கதைகளில் இணைத்து சுவாரசியமாக்கி இருக்கிறார் .
    ‘ கடைசிக் குறிப்பு ‘ , ‘ தொர்சானி ‘ போன்ற கதைகளில் , காடுகளில் நிகழும் அமானுஷ்ய சக்திகளையும் , வனங்களின் வினோதங்களையும் மர்மநடையில் , எதிர்பாராத முடிவுகளோடு அமைத்திருக்கிறார் .
    நகரங்களில் நிகழும் கதைகள் , நகைச்சுவை உணர்வையும் , நம் நிஜ வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களின் உணர்வையும் தருகின்றன .
    மரஞ்செடிகொடிகளின் தாவரவியல் பெயர்களையும் , நீலப் பசு , ( நீல்கை ) போன்ற வனவிலங்குகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தும் உத்தி வியக்க வைக்கிறது .
  • SAVE 7%
    Add to cart

    நீலப்பசு/ Neela pasu

    250 233
  • SAVE 7%
    Add to cart

    பச்சைக்கனவு / Patchai Kanavu

    300 279
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பனி குல்லா / Pani Kulla

    130 121
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பாகேஸ்ரீ / Baage Sri

    165 153
  • SAVE 7%
    Add to cart

    பால்யம் / Paalyam

    160 149

    துயரங்களும் சிக்கல்களும் நிறைத்திருக்கும்போது புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால் .. அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப் கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவ தர்களை நெறிப்படுத்த இன்னும் வல்லாம் வேண்டும் ? தொடர்ந்து இந்தக் கேள்விகளோடு வந்துகொண்டிருக்கின்றன சல்மாவின் புதிய கதைகள் !