Showing 177–192 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    அம்பை கதைகள் / Ambai Kataikal

    990 921

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல் . அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது . திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்குக் கொண்டுவந்தவர் அம்பை . இந்தக் கதைகள் உறவுகளால் , போராட்டங்களால் , கசப்புகளால் , தனிமைகளால் , அபூர்வமான பரவசங்களால் , விம்மல்களால் , கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிறும் சமூகத்தவர்களால் , இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால் , இன்ன பிறவற்றால் ஆனது . இந்தக் கதைகளில் கதைசொல்லி சிறுமியாக , மாணவியாக , களப்பணியாளராக , வளர்ந்த மகளாக , மத்திமவயதை உடையவளாக , ‘ மௌஸிஜியாக , தீதியாக ‘ பல வயதுகளில் வருகிறாள் . கதைகளுக்குள் ஊடாடி வரும் சங்கீதமும் பெண்களுக்குள் நிகழும் உறவில் வெளிப்படும் இசைமையும் தாளலயத்தோடு வெளிப்பட்டிருக்கிறது . பெரிய அலையாகவும் பிரம்மாண்டமானதாகவும் நுரையாகவும் பின் கூடிவந்து சேர்வதாகவும் பிறகு குலைந்து போகக்கூடியதாகவும் மீண்டும் எழக்கூடியதாகவும் மூழ்கடிக்கக்கூடியதாகவும் தூக்கி எறியக்கூடியதாகவுமான ஆக்கங்களைக் கொண்ட அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அறம் / Aram

    400 372
  • SAVE 7%
    Add to cart

    அவலங்கள் / Avalangal

    180 167

    2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன . இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக , அரசியல் , பொருளாதார , பண்பாட்டு , வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம் . அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சினைகளே பேசப்படுகின்றன . சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள் ,சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் சாத்திரி . கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான் . இதில் ” கைரி ” என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம் . மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி , சமூக ( சாதி ) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் . எந்தக் குற்றமும் செய்யாத , குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப்பெண் எப்படி அரசியல் படுகொலையொன்றில் , அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினர் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார் .

  • SAVE 7%
    Add to cart

    அவளது வீடு / Avaladthu veedu

    270 251
  • SAVE 7%
    Add to cart

    எருது / Eruthu

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஏமாளி / Emali

    160 149
  • SAVE 7%
    Add to cart

    கருப்பட்டி / Karuppatti

    175 163