Showing 161–176 of 239 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வற்றாநதி / Vatranathi

    150 140
    ஒரு சின்ன விதை ஒவ்வொரு சொட்டு ஈரத்தையும் பற்றிக் கொண்டு , முட்டிமோதி மண்ணைக் கிளர்ந்து , மேல்நோக்கி எழுந்து நின்றபின் , தான் முளைவிட்ட இடத்தில் வேர் கிளப்பி நிற்கத் துவங்குவது போல் இந்தநூல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வலுவாக்கிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன் .
    கார்த்திக் புகழேந்தி
  • SAVE 7%
    Add to cart

    வலசை / Valasai

    100 93
    வலசை ‘ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன் . கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வர வேண்டுமென நாளும் கர்த்துக் கிடப்பவன் நான் . என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும் , சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து வலசை வந்திருக்கிறது . சகிப்புத்தன்மை என்பதைவிட சக உயிரை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியரின் தன்னியல்பாலேயே இப்பதிவு சாத்தியமாகியிருக்கிறது . அந்த வகையில் ஆசிரியர் கொற்கை அஜூடின் , தான் எடுத்துக் கொண்ட பணியை சமூக , மத நல்லிணக்கக் கூறுகளோடு மட்டுமல்லாது , அக்கறையோடும் செய்திருக்கிறார் என்பதும் மனம் நிரம்பி வழியக் காரணமாய் இருக்கிறது .
    – எழுத்தாளர் ஜோ டி குரூஸ்
  • SAVE 7%
    Add to cart

    வாட்டர் மெலன் / Water melon

    180 167
  • SAVE 7%
    Add to cart

    வான் நெசவு / Vaan Nesavu

    215 200

    ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது . ஆனால் அந்த அலுவலகச் சூழல் , தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை . தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின் , பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன . தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன .

  • SAVE 7%
    Add to cart

    வியாசை / Viyaasai

    170 158
  • SAVE 7%
    Add to cart

    விரல்கள் / Viralgal

    130 121
    பெண் , ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை , முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இந்தக் கதைகள் வழியாக நான் கண்டடைந்தேன் . குறிப்பாக , ‘ விரல்கள் ‘ , மற்றும் ‘ அழகின் ஒரு பகுதி ’ , கதைகள் . பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இலட்சோப இலட்ச ஆண்டுகளில் இருவரும் ஒருவரையொருவர் எதிரிகளாய்ப் பார்க்கக் கற்றுக்கொண்டதைக் காதல் வழியாகவே வெல்லமுடிந்திருக்கிறது . என்றாலும் , காதலில் புதைந்து கிடக்கும் முட்டாள்தனம் மானுட ரகசியங்களின் பொருள் விளங்கிக் கொள்ளும் தம் முயற்சிகளைக் கைவிட்டது போல் தோன்ற காதலை எப்படியெல்லாம் தன் வாழ்க்கையின் அறைகளுக்குள் நகர்த்திச் செல்லமுடியும் என்பதன் பயணம்தான் இத்தொகுப்பு .
    குட்டி ரேவதி
  • SAVE 7%
    Add to cart

    விஷக் கிணறு / Visak Kinaru

    200 186
  • SAVE 7%
    Add to cart

    வெட்கமறியாத ஆசைகள் / Vetkamariyadha Aasaigal

    160 149

    வெட்கமறியாத ஆசைகள் , 11 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு . இந்த சிறுகதைகள் அனைத்தும் ஆசை , பேராசை , நிராசைகள் என பல்வேறு மனிதர்களின் ஆசைகளும் அது நிறைவேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி , நிறைவேறாமல் போகும் போது வரும் வலிகள் , துக்கம் , கோபம் , அவமானம் . துரோகம் என எழுதப்பட்டுள்ளது . ஆசைகளினால் வரும் இன்ப துன்பங்கள் . வெவ்வேறு சூழல்கள் , வெவ்வேறு வயதினர் , வெவ்வேறு காலகட்டங்கள் என கதைகள் அனைத்து வயதினரின் ஆசைகளை வெளிப்படுத்துகிறது .

  • SAVE 7%
    Add to cart

    வெண்கடல் / Venkadal

    200 186

    அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலைவரிசையில் எழுதப்பட்ட பதினோரு கதைகளின் தொகுப்பு வெண்கடல் . உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம் . ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன . பெரும் பிரபஞ்ச இயக்கத்தில் சிறு துளியாக இருக்கும் மனித வாழ்வினை அதன் தருணங்களின் வழியேதான் நினைவு கூரவோ அடையாளப் படுத்தவோ முடிகிறது . மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள் . இதில் வரும் மனிதர்களின் வழியே நாம் சந்திக்கவிருக்கும் அந்த நிகழ்வுகள் இதற்கு முன்போ அல்லது இனியோ நம் வாழ்வில் நிகழ்ந்த , நிகழ இருப்பவை .

  • SAVE 7%
    Add to cart

    வெளிச்சமும் வெயிலும் / Velichamum Veyilum

    200 186
    இத்தொகுதியில் உள்ள ‘ மறவோம் ‘ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச் சிறந்த சிறுகதை மட்டுமல்ல , புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்தக் கதைகளில் ஒன்றும்கூட . இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலைக் கதைத்தளத்தில் நிகழ்த்தி , கதை முடிந்த பின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது . அவருடைய வெற்றி , நுண்ணிய அக அவதானிப்புகள் எளிதாக வந்து செல்வதில் உள்ளது .
    – ஜெயமோகன்