Showing 81–96 of 466 results
-
Read more
கடவுளின் நாற்காலி / Kadavulin Naarkali
₹220₹205தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற , அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார் . ஆப்பிரிக்காவின் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர் . தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வரிசையில் ‘ கடவுளின் நாற்காலி ‘ மிக முக்கியமான இடத்தைப் பெற்றுவிடும் என்று நம்புகிறேன் . துவங்கிய வேகத்தில் 200 பக்க நாவலை வாசித்து முடித்த அனுபவம் ஆச்சரியமானது . இக்கதையின் பிரமிப்பு என்பது ஒரு வகையில் ‘ ஹாலிவுட் அசத்தல் ‘ என்றே சொல்லலாம் .எழுத்தாளர் பொன்ஸீ -
Read more
கடைசி வைஸ்ராயின் மனைவி / Kadaisi Vaisirayin Manaivi
₹430₹4001947 ஆம் வருடத்திய வசந்த காலம் . மௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர் . இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம் . எட்வினா தயக்கம் நிறைந்தவர் . ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர் . அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா . பேரழகி , பட்டாசு போன்றவர் . வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர் . அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே . அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி .அவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர் . அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல , பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை .பிரிவினை காலத்தில் நிகழும் ‘ கடைசி வைஸ்ராயின் மனைவி என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை , காதலை , துயரத்தை , சோகத்தை , இரக்கமின்மையை , நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை . -
Read more
கதீட்ரல் / Cathitral
₹220₹205பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் , கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்ளிருக்கும் மறைமுகமான அதிகாரம் , அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது . தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி . பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க . தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு , தனது பால்ய களவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு . பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள் . முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறான் . வழக்கமான நேர்க்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச் சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது . மோகனரங்கன்
-
Read more
கதை கேட்கும் சுவர்கள் / Kathi Katkum Suvargal
₹350₹326வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது ? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை , சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது . தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது .உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அலைக்கழித்தது .இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென , நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய்ப் பூத்து நிற்கிறாள் . அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது . -
Read more
கலங்கிய நதி / Kalankiya Nati
₹390₹363ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள் . கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை உச்சத்தை அடையும் தருவாயில் சந்திரன் தன் நிறுவனத்தில் நடந்த பெரிய ஊழலைக் கண்டுபிடிக்கிறான் . அதனால் தனக்கு ஏற்படும் சிக்கல்களையும் கடத்தல் நாடகம் எவ்வாறு முடிவுறுகிறது என்பதைப் பற்றியும் நாவல் எழுத முனைகிறான் . பல அடுக்குகள் கொண்ட இந்த நாவல் கதைக்கும் அதை எழுதுபவனுக்கும் உள்ள எல்லைக்கோட்டை மாறி மாறிக் கடக்கிறது . சந்திரனின் மனைவி சுகன்யாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனையில் உண்மையின் பல சாயல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன .தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச் சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான பி . ஏ . கிருஷ்ணன் தன் முதல் நாவலான The Tiger Claw Tree ஐத் தமிழில் புலிநகக் கொன்றை எனப் படைத்தார் . பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்ற அப்படைப்புக்குப் பின் கலங்கிய நதி கிருஷ்ணனின் இரண்டாம் புதினமான The Muddy River இன் தமிழ் வடிவமாக வெளிவருகிறது .