Showing 49–64 of 466 results
-
Add to cart
இறுதி யாத்திரை / Iruthi Yathirai
₹150₹140வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் . அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது . புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை . மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது . எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது . அதன் அப்பழுக்கற்ற , பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . காலம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்.டி.வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார் . ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன ?
-
Add to cart
உஷ்ணராசி / Ushnaraasi
₹750₹698இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட , அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம் , நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது . நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது . நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல் .அடூர் கோபாலகிருஷ்ணன்ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த போராட்ட நாட்களை விவரிக்கும் நாவல் . ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை . இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம் . -
Add to cart
என் பெயர் நுஜூத் / I Am Nujood
₹180₹1671998 ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜூத் . 2008 ஆம் ஆண்டு , குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடம் , ‘ உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப் போகிறாய் ‘ என தந்தை சொல் கிறார் . ஈர்க்கத்தக்க , விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது . ஒட்டுமொத்த உலகமும் அவளின் தோள்மேல் இறங்கியது போன்று இருந்தது . சில நாட்களுக்குப் பிறகு அவசரமாக திருமணம் நடந்தது . சிறுமி நுஜூத் , தனது எல்லா வலிமையையும் சேகரித்து அவளுடைய பரிதாபமான விதியிலிருந்து தப்பிக்க முயன்றாள் …– டெல்ஃபின் மினோவி ‘பெண் ஏன் அடிமையானாள் ? ‘ என்று பெரியார் எழுதிய நூலுடன் , பெண்களுக்கு அன்பளிக்கத் தகுதியான ஒரு நூல் இது . விடுதலை முழக்கங்களை விட பாதிக்கப்பட்டு சுய எழுச்சியால் மீண்டவர்களின் , விடுதலையடைந்தவர்களின் குரல் களுக்கிருக்கும் வலிமை எவரையும் ஆழமாகத் தொடக்கூடியது .-ஸர்மிளா ஸெய்யித்