Showing 17–32 of 466 results
-
Read more
அறுவடை / Aruvadai
₹90₹84ஆர் . ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘ குறுநாவல் ‘ என்னும் வரையறைக்குள் அடங்குபவை . அவற்றுள் ‘ அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு . பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘ அறுவடை’யை எழுதினார் . புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று . வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது . அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘ பெண் நோக்கு ‘ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது . அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது . இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும் .பெருமாள்முருகன் -
Add to cart
அழியாச்சொல் / Azhiyasol
₹290₹270மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று கொண்டேயிருக்கும் , இடையறாத நனவெழுச்சி பொங்கிப் பெருகியோடும் ஒரு கதை சொல்லியின் குரல் . அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல் லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள் . தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு . பெண் உடல்பிம்பம் உடைபடும் தருணங்களும் , அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின் கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின் நதியாய் பாய்ந்திடத் தூண்டுகின்றன . ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க முடியாத பேருவகை வாழ்க்கை . கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க் கதைவெளிக்குள் அழைத்துச் செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே அழியாச்சொல் . அழியாச்சொல் , குட்டி ரேவதியின் முதல் நாவல் .
-
Read more
ஆடு ஜீவிதம் / Aadu Jeevitham
₹250₹233நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைபார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான் . இரக்கமற்ற , அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது . தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது . முடிவில் , பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார் .மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல் . மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின் , நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகவும் மென்மையாகவும் கூறி , தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார் .2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல் -
Read more
ஆயுத எழுத்து / Aayudha Ezhuthu
₹400₹372முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரது தன்வரலாற்றை ஓட்டிய நாவல் . இலங்கை , இந்தியா , தென்கிழக்கு ஆசிய நாடுகள் , ஐரோப்பிய நாடுகள் , ஆப்பிரிக்கா நாடுகள் என ஈழப்போராட்டத்தோடு தொடர்பு கொண்ட உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்யக்கூடிய , சம்பந்தப்பட்ட பல்வேறு மனிதர்களின் அணுகுமுறைகளில் , உளவியல் , வாழ்க்கை , சோகம் , துயரம் அனைத்தையும் தனதாக்கம் கொண்டுள்ள நூல் இது . போற்றுதலும் , தூற்றுதலும் இல்லாமல் வாழ்க்கையையும் , வரலாற்றையும் சற்றே தள்ளி நின்று கூறும் நூலும் கூட . கற்க வேண்டிய பாடங்களையும் , வழங்க வேண்டிய பாடங்களையும் , வழங்க வேண்டிய தீர்ப்புகளையும் வாசகரிடம் முன்வைத்துள்ள நூல் .
-
Add to cart
ஆறாவது பெண் / Aaaravathu Penn
₹200₹186இங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘