Showing 241–256 of 466 results
-
Add to cart
பெண்ணச்சி / Pennachi
₹130₹121ஒரு பெண்எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் உண்டு . அவளது எழுத்துகளின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள் , கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்குப் புரிதல் இருக்கும் . அதைப் பார்த்து , புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார் .ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது . கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண்எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது . -
Add to cart
பேய்ச்சி / Peichi
₹300₹279நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு . ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக , பின்னலாக உருக்கொள்ள வேண்டும் . ஒரு வரலாற்றுப் பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும் . கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும் . ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது . நவீனின் முதல் நாவல் ‘ பேய்ச்சி ‘ அவ்வகையில் , மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில் , மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம் .சுனில் கிருஷ்ணன்