Showing 209–224 of 466 results
-
Read more
பதிமூனாவது மையவாடி / Pathimoonaavathu Mayyavaati
₹320₹298கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது . ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட . உடலை , காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல் . அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி : ” சீயோன் குமாரத்தியே , கெம்பீரித்துப்பாடு . இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள் . எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு . உன் ஆக்கினைகளை அகற்று . திறந்த உடலைக் களிப்பாக்கு .இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும் . பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல் , பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது . இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘ சமநிலையை பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள் . சோ . தர்மன் , ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘ வெள்ளந்தித்தனத்துடன் நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார் . ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஓட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார் .கருத்தமுத்து ஒரு ஆணாக , குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது . நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான் . ஒன்று கல்வி , இன்னொன்று மதம் , இணையாகவே காமம் , ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான் . இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான் .ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது .– ஜெயமோகன் -
Add to cart
பனி / Pani
₹650₹605ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவ மான நாவல் ‘ பனி ‘ . சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல் களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது .பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘ பனி ‘ . மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங் களுடனும் சொல்கிறது இந்த நாவல் .தனது படைப்புகளின் நிரந்தரக் இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக் . ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘ கா’வின் அனுபவங்களே இதன் கதை . இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு . -
Add to cart
பறந்து திரியும் ஆடு / Paranthu Thiriyum Aadu
₹100₹93பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன் . பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன . களங்கமில்லாத மனநிலையைக் குறிக்க ஆட்டுக்குட்டியை குறியீடாகச் சொல்வார்கள் . குழந்தைகள் துள்ளித் திரியும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே உலகை வலம் வருகிறார்கள் . இக்கதை சிறார்களை மட்டுமில்லை பெரியவர்களையும் வானில் பறக்கவே செய்கிறது .
-
Add to cart
பாதி இரவு கடந்து விட்டது / Paathi Iravu Kadanthu Vittathu
₹450₹419இந்திய மரபின் தேர்ந்த கதைசொல்லி அமிதபா பக்சி நவீனத்தின் சிக்கல்களைக் கையாள்வதில் பரந்த பார்வையும் கொண்டவர் , புறத்தை விவரிப்பது போலக் காட்டி அகத்திற்குள் ஆழ்ந்து செல்வது இவரது எழுத்தின் இயல்பு கதை கேட்கும் ஆனந்தத்தையும் வாழ்வுத் துயரம் தரும் பதற்றம் உள்ளிட்ட கொந்தளிப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தும் நுட்பம் ‘ பாதி இரவு கடந்துவிட்டது ‘ நாவலில் அமைந்திருக்கிறது . ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னோடும் போதும் படிப்படியாகப் பெருந்திறப்பு ஒன்றைக் கண்டடைய முடிகிறது . இத்தகைய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வு நழுவி இழுத்துச் செல்லும் மொழி வாசிக்கச் சுகமாக இருக்கிறது . சுழலில் தவிக்கும் தமிழ் எழுத்துப் பரப்பில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் .– பெருமாள் முருகன் .