Showing 33–47 of 47 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மனித சமுதாயம் / Manitha Samuthayam

    350 326
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ராஜராஜ சோழன் / Rajaraja Chozhan

    150 140
    ராஜராஜ சோழனின் ஆட்சி , பொற்காலம் என்று அழைக்கப் படுகிறது . வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத் தவராக கொண்டாடப்படும் அதே சமயம் , மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவு கூரப்படுகிறார் .
    கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை , மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன . ஆனால் , எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும் , படை வலிமையையும் அவர் பயன்படுத்த வில்லை . போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு , மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார் . எளியோருக்குக் கடன் வழங்கினார் .
    ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல , மக்கள் நலப் பணிகளும் அதிகம் . மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது . காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது . கலை , ஆட்சி முறை , சமயம் , இலக்கியம் , பொருளாதாரம் , பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம் . அந்த வகையில் , தென்னிந்தியாவில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான் .
    ச.ந. கண்ணனின் இந்தப் புத்தகம் , பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை , அதன் சமூக , அரசியல் முக்கியத்துவத்தை விரிவாக ஆராய்கிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஹிட்லர் / Hitler

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கடைசி முகலாயன் / The Last Mughal

    750 698
  • SAVE 7%
    Add to cart

    கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் / Many faces of kashmiri nationalism

    480 446
    கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்த நூல் கஷ்மீரிகளை , கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள , கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது .
    இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது . பனிப்போர் முடிந்து , சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து , பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர் . இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன .
    இந்திய – கஷ்மீர் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற மதவெறி உணர்வுகள் இந்தத் துணைக்கண்டத்தையே நிம்மதியிழக்கச் செய்து வருகின்றன . மதவெறியும் , தீவிரவாதமும் – அது பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ மக்களின் ஒற்றுமைக்கு எல்லையில்லா தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றன . இவை அனைத்தையும் தனக்கே உரிய அனுபவத்தோடும் , லாவகத்தோடும் விவரிக்கிறார் நந்திதா ஹக்ஸர் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    திப்புசுல்தான் / History of Tipu Sultan

    600 558

    இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் , முதல் பத்தியில் , முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர் , திப்புவுடையது . கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை , மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு , இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது . அதேவேளையில் , திப்புவின் அரசாங்கமும் , அதை அவர் நடத்திய விதமும் , அவரது இராணுவமும் , அவர் செய்த சீர்திருத்தங்களும் , மதக் கொள்கைகளும் , தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும் , சமூக சமத்துவமும் , அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன . பல்வேறு ஆய்வுகளின் மூலம் , திப்புவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை , சமூகத்திற்கு தனது பங்களிப்பாக இந்நூல் மூலம் தந்திருக்கும் மொஹிபுல் ஹசன் , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் . முதுபெரும் வரலாற்றாசிரியர் . அலிகார் பல்கலைக்கழகத்திலும் , காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தவர் . புதுடெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவியவரும் , அதன் முதல் பேராசிரியரும் ஆவார் .

  • SAVE 7%
    Add to cart

    போர்ப் பறவைகள் / Por paravaigal

    900 837
    ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன . சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டு சென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு , மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது .
    ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா , மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக , இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வரலாற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் .
    மயிர்க்கூச்செறிய வைக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பு இது . இந்நூலின் கதை நகர்ந்த விதம் மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிந்து விட்டது . எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஓர் அபூர்வக் காப்பியமாகவே காணப்படுகிறது .
    போர்ப் பறவைகள் என்னும் இந்நூல் என்னை ஐந்து வயதுக் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளிவிட்டது . நிலையான சமூக வரலாற்றின் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு குடும்ப வரலாறு இது .
    மார்ட்டின் ஏமிஸ் இண்டிபெண்டண்ட் ஆன் சண்டே
    வாழ்க்கையின் வேதனைகளை வெளிப்படுத்திய இந்நூல் என் மனதைத் தொட்டுவிட்டது . ஒரு தேசம் மூளைச்சாவு அடைந்த விவரத்தினை விவரிக்கும் இந்நூல் எப்போதும் என்மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் .
    பேலர்ட்
    சண்டே டைம்ஸ்
  • SAVE 7%
    Add to cart

    ஷா இன் ஷா / Shaa In Shaa

    175 163