Showing 17–32 of 47 results
-
Add to cart
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா / India Since Independence
₹470₹437இந்தியா சுதந்திரம் பெற்றபோது , இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது , பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் , பொருளாதாரத் திட்டங்கள் , வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்நூல் மத்திய , மாநில அரசுகளில் கட்சிகளின் அரசியல் , பஞ்சாப் பிரச்சினை , வகுப்புவாத எதிர்ப்பு அரசியல் , தீண்டாமை போன்ற பிரதான சிக்கல்களை அலசி , நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அடிப்படைக் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது .1991 முதலான இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் , நிலச் சீர்திருத்தங்கள் , பசுமைப் புரட்சி ஆகியவற்றுடன் , புத்தாயிரமாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கூர்ந்து கவனித்து கருத்துரைத்துள்ளது .எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் மாணவர்கள் . ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் பயனளிக்கும் . -
Read more
திரு&திருமதி ஜின்னா /Mr And Mrs Jinnah
₹750₹6981918 ம் ஆண்டில் ருட்டி பெத்தித் . முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து , மொத்த சமூகமே அதிர்ந்தது ; சீற்றமும் அடைந்தது . அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம் ; வேறு வேறு மதம் ; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம் . இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை , ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர் , இதுவரை வெளிவராத கடிதங்கள் , நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள் , ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார் . தில்லி , பம்பாய் , கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும் , மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது .எவராலும் புரிந்து கொள்ள முடியாத தனித்துவத்தோடிருந்த ஜின்னா , பல எதிர்பார்ப்புகளோடும் காத்திருப்புகளோடும் இருந்த ருட்டி என்ற இருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி , அக்காலத்தில் நிகழ்ந்த சமூக , அரசியல் நிலைப்பாடுகளையும் பொருத்தமான பின்புலமாகக்கொண்டு எழுதியுள்ளார் .அரசியலிலும் வரலாற்றிலும் ஆர்வம்மிக்கோரும் , மறக்க முடியாத ஓர் அழகிய காதல் கதையை விரும்புவோரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் .