Showing all 16 results

 • SAVE 7%
  Add to cart

  அரூபத்தின் நடனம் / Arupathin Nadanam

  350 326
  காஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும் . பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது . சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை .
  1930 களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித் திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன .
  நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா . அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே .
 • Out Of Stock SAVE 7%
  Read more

  அறியப்படாத தமிழகம் / Ariyappataata Tamizakam

  75 70
 • SAVE 7%
  Add to cart

  அழியாத கோலங்கள் / Azhiyatha Kolangal

  400 372

  வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர் . சத்தமில்லாமல் , அதிராமல் , நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது . நான் இப்படித்தான் இருப்பேன் , அது மாறாது . புலியின் மேல் வரிகள் என்னுடையது , அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது .

 • SAVE 7%
  Add to cart

  ஆஸாதி / Aacaati

  275 256

  ஆஸாதி ! -சுதந்திரம் கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது . கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து , அந்த மாநிலம் முடங்கியது.தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் . இணையத் தொடர்பு துண்டிக்கப் பட்டது . மீண்டும் கஷ்மீர் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் . கீழ் வந்தது .  போராட்டம் . அடக்குமுறை , வன்முறை , உயிரிழப்புகள் , இடப்பெயர்வுகள் …. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது , பாசிச அரசின் செயல்திட்டம் தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியிருந்தது . திடீரென்று வீதிகள் அமைதியாகின , நடமாட்டங்கள் அனைத்தும் முடங்கின . கோவிட் -19 அச்சுறுத்தல் நவீன உலகை ஸ்தம்பிக்க வைத்தது .  பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் பெருந்தொற்று புதிய உலகிற்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது . உலகை மறுகற்பனை செய்துபார்ப்பதற்கான வாய்ப்பை அது வழங்கியிருக்கிறது என்கிறார் அருந்ததி ராய் . வலுப்பெற்றுவரும் எதேச்சாதிகாரச் சூழலில் சுதந்திரம் என்பதன் பொருள் . என்ன என்று சிந்திக்கும்படி இந்தக் கட்டுரைகள் நம்மைத் தூண்டுகின்றன . நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் மொழியின் பங்கு என்ன , துயரார்ந்த இன்றைய சூழலில் புனைவுக்கும் மாற்றுக் கற்பனைகளுக்குமான இடம் எது என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரைகள் . எழுப்புகின்றன .

 • Out Of Stock SAVE 7%
  Read more

  இலக்கற்ற பயணி / Ilakkatra Payani

  175 163
 • SAVE 7%
  Add to cart

  எனதருமை டால்ஸ்டாய் / Enatharumai Tolstoy

  100 93

  உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதும் , அவற்றைப் பற்றிப் பேசுவதும் , எழுதுவதும் ஒரு அற்புதக்கலை . மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும் . தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் . க.நா.சு.வுக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக் களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார் . உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ள இக்கட்டுரைகள் மகத்தான படைப்பாளியின் வாழ்வுபற்றியும் படைப்பின் உள்ளடுக்குகள் பற்றியும் ஒருசேர அறியத் தருகிறது என்பதே இந்த நூலின் புதுமையாகும் .

 • SAVE 7%
  Add to cart

  கலாச்சாரக் கவனிப்புகள் / Kalachara Kavanippugal

  300 279
  யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘ இவ்விடத்தில் துப்பாதீர்கள் ’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘ எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான் ‘ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன் .
  ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்துநடை கைவரப் பெற்றவர் .
  சச்சிதானந்தன் சுகிர்தராஜா வள்ளுவன் குறிப்பிட்ட நுண் மான் – நுழை புலம் . தான் சார்ந்த துறையில் பெரிய ஆளுமை . இவர் துறைசார்ந்த அறிஞர்கள் அறிந்த பெருந்தகை . வாழையடி வாழையாக வரும் இலங்கைப் புலமை மரபில் வரும் இவர் மற்ற புலமையாளர்களைப் போல் தான் சொல்லவாற விடயத்தை முறைத்தபடியோ விறைத்தபடியோ சொல்லாமல் சிரித்துக்கொண்டு உறைக்கச் சொல்லும் எள்ளல் ததும்பும் புதுநடைக்குச் சொந்தக்காரர் .
  செல்வம் அருளானந்தம்
 • SAVE 7%
  Add to cart

  கோடுகள் இல்லாத வரைபடம் / Kodugal illatha Varaipadam

  75 70

  சரித்திரத்தின் சாட்சியாக இருப்பவர்கள் யாத்ரீகர்கள் . உலகப்புகழ் பெற்ற யாத்ரீகர்களையும் அவர்களின் சாகச அனுபவத்தையும் விவரிக்கிறது கோடுகள் இல்லாத வரைபடம் கடலோடிகளின் குறிப்புகள் அன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்து அறிந்து கொள்ள பேருதவி செய்கின்றன . மிளகும் கிராம்பும் தேடி தான் போர்த்துகீசியர்களும் டச்சுகாரர்களும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இந்தியா வந்தார்கள் . இதன் தொடர்ச்சியாகவே கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது . வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்துவதன் வழியே சமகாலத்தின் போக்கினை அறியச் செய்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் .

 • SAVE 7%
  Add to cart

  சாதியை அழித்தொழித்தல் /Caatiyai azhittozittal

  440 409
  பி.ஆர் . அம்பேத்கரின் ‘ சாதியை அழித்தொழித்தல் ‘ மிக முக்கியமான ஆனால் அலட்சியப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் எழுத்துக்களுள் ஒன்று . 1936 இல் எழுதப்பட்ட இந்நூல் மிகத் துணிச்சலாக இந்து மதத்தையும் அதன் சாதீய அமைப்பையும் நிராகரிக்கிறது . W.E.B. டுபாய்ஸ் போன்ற ஆளுமையான அம்பேத்கர் , இறுகிய , கீழ்மேல் தன்மையில் , சமநீதியற்ற சமூகக் கட்டமைப்பை விதிக்கின்ற இந்து சமய நூல்களை மேதமையோடு இதில் விமர்சிக்கிறார் . உலகின் அதிகம் அறியப்பட்ட இந்துவான மகாத்மா காந்தி அம்பேத்கரின் கேள்விக்கணைகளுக்கு எதிர்வினையாற்றினார் . அந்த மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை .
  விரிவான ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிவரும் ‘ சாதியை அழித்தொழித்தல் இன் இப்பதிப்பை ‘ டாக்டரும் புனிதரும் ‘ என்ற முன்னுரையின் வழி அறிமுகம் செய்யும் அருந்ததி ராய் , நவீன இந்தியாவில் இன்னும் எவ்வாறு சாதி துலங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கருக்கும் காந்திக்குமான முரண்கள் அடங்கா அதிர்வுகளாக முழங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் விளக்குகிறார் . இனம் , சாதி , ஏகாதிபத்தியம் பற்றிய பார்வைகளை காந்தி உருவாக்கிக்கொண்ட அவரது ஆரம்பகால அரசியல் தளமான தென்னாப்பிரிக்காவுக்கு ராய் நம்மை அழைத்துச் செல்கிறார் . அம்பேத்கரின் வருகையை தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வாகப் பதிவிடுவதோடு எவ்வாறு அவரது மேதமையும் கூர்மதியும் விடுதலைப் போராட்டத்தைப் பீடித்திருந்த பிளவுகளையும் சீர்திருத்த மறுப்பு மூர்க்கத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது என்பதையும் விவரிக்கிறார் . அம்பேத்கரின் சாதியில்லாத உலக உயர் கருத்தாக்கத்துக்கு ராய் புத்துயிர் பாய்ச்சுவதோடு தலித் புரட்சி நிகழ்ந்தாலொழிய இந்தியா சமத்துவமற்ற அமைப்பாக நொண்டிநடையிலேயே இயங்கிக்கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கிறார்.
 • Out Of Stock SAVE 7%
  Read more

  பிகாசோவின் கோடுகள் / Picassovin Kodugal

  150 140
 • SAVE 7%
  Add to cart

  புறப்பாடு / Purappadu

  380 353
  அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது . சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம் . கடிகாரக் காலம் . அது அர்த்தமற்றது . அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது .
  அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே . அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன . நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன் . அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும் . அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டு வருகிறதோ அதை எழுதிச் செல்வேன் . அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில் ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன் .
  ஜெயமோகன்