Showing 1–16 of 19 results
-
Add to cart
எனது ஆண்கள் / Enathu Aangal
₹190₹177பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா , அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் . மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார் . ‘ எனது ஆண்கள் ‘ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது . பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார் . இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல ; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும் .
-
Add to cart
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993 / Chellammal Ninaivu Kuripugal 1993
₹180₹167செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் , அவமதிப்புகள் , பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன . குடும்ப அமைப்பின் சிக்கலான உறவுகள் , உரையாடல்கள் , உணவு படைத்தல் , அவநம்பிக்கைகள் , அவதூறுகள் இவற்றுடன் வரும் அழகு , அன்பு , பாசம் , கனிவு , காதல் இவற்றை நேரடியாக மட்டுமில்லாமல் தன்மறிவாகவும் கூறும் இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது . பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் புரிதலுக்கான இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது .