Showing 33–48 of 205 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கண்பேசும் வார்த்தைகள் / Kan Pesum Vaarthaigal

    140 130
  • SAVE 7%
    Add to cart

    கதாவிலாசம் / Kathavilasam

    380 353

    தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘ கதாவிலாசம் ’ ” . தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை , தன் சொந்த அனுபவங் களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. தமிழ் சிறுகதையின் சாதனையாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம் . கதைகளின் வழியாக வாழ்க்கையின் விசித்திரங்களையும் , ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது .

  • SAVE 7%
    Add to cart

    கர்னாடக இசையின் கதை / Karnataka Isaiyin Kadhai

    175 163

    இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள் , எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன . இசையுலகினுள் நிலவும் சாதி , பாலினம் , மொழி , மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா . வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள் , கச்சேரிக்கான கட்டமைப்பு , பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார் . கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் கொண்டிருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறார் . இசைக்கும் இறைமை நிகழ்களம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார் . கர்னாடக , இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார் . நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார் . இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார் . கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம் . ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது . அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது . இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கலாச்சார இந்து / Kalachara Hindu

    200 186

    இத்தொகுதியில் இந்துமதம் , மெய்யறிவு குறித்து ஜெயமோகன் அவருடைய வாசகர்களுடன் செய்த உரையாடல்கள் கட்டுரை வடிவில் உள்ளன . ‘ நான் இந்துவா ? ‘ எனக் கேட்கும் அடித்தளச் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமொழி அளித்தபடி தொடங்கும் இந்நூல் நாத்திகத்துக்கும் இந்து மதத்துக்குமான உறவு , பண்பாட்டுக்கும் மதத்துக்குமான தொடர்பு , நம் குழந்தைகளுக்கு மதத்தை அறிமுகம் செய்யத்தான் வேண்டுமா போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தேடிச்செல்கிறது .

  • SAVE 7%
    Add to cart

    கலிலியோ மண்டியிடவில்லை / Galileo Mandiyidavillai

    125 116

    அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம் . ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் அறிந்துகொள்ள வழிகாட்டுகின்றன இக்கட்டுரைகள் . அறிவியல் , இலக்கியம் , சினிமா , கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளையும் இக்கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன .

  • SAVE 7%
    Add to cart

    காலந்தோறும் காவிரி / Kalanthorum Kaveri

    320 298
    காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக்கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன் . காவிரி துவங்கும் இடத்திலிருந்து , முடியும் இடம் வரையிலும் , இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள் , வளர்ந்த நாகரிகம் , விவசாயம் , மக்கள் , ஊர்கள் , போர்கள் , படுகொலைகள் , இலக்கியப் பதிவுகள் , கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல் , எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டுவந்துள்ளார் . காப்பியங்களிலும் , புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும் , காவிரி வளர்த்ததும் , காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக , காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை .
    மு.வேடியப்பன்
  • SAVE 7%
    Add to cart

    காவிரி ஒப்பந்தம் / Kaveri Oppantham

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    காவேரியின் பூர்வ காதை / Kaviriyin Poorva Kaathai

    260 242
  • SAVE 7%
    Add to cart

    குண சித்தர்கள் / Guna Sithargal

    170 158