Showing all 2 results

  • SAVE 7%
    Add to cart

    தமிழர் மானிடவியல் / Tamizhar Maanidaviyal

    450 419
    கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள் , மனித நடத்தைகள் , சமூகங்கள் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வது மானிடவியல் , சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும் , பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள் , மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன .
    இந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார் . இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம் , சாதி , சமூக மாற்றம் , திருமணம் , சடங்குகள் , தெய்வங்கள் , திருவிழா , கைவினைக்கலை , புழங்குபொருள் , கிராமம் – நகரம் , சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப்படுத்துகிறார் . இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது ; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது .
    மானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு , மண்வாசிப்பு , மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும் . ஆனால் இந்தத் துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பை நிறைவாகச் செய்யவில்லை . பக்தவத்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன .
    பேராசிரியர் தொ . பரமசிவன்
    தாய்வழிச் சமூகம் தொடங்கி சமகாலச் சமூகம் வரை தமிழரின் தொன்மை , வாழ்வியல் , பண்பாடு அனைத்தையும் சொல்வதே ‘ தமிழர் மானிடவியல் .
    ‘ பேராசிரியர் சிவசுப்பிரமணியன்
    மானிடவியல் கட்டமைக்கும் மெய்ம்மையின் சிக்கலை அதன் நுட்பங்களோடு இந்த நூல் முன்னிறுத்துகிறது . தமிழ்ச் சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள விழையும் எவரும் சிறிது முயன்றால் இந்த நூலைக் கைவிளக்காகக் கொள்ளலாம் .
    பேராசிரியர் ஆ .இரா .வேங்கடாசலதி
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நான் ஏன் தலித்தும் அல்ல ? / Naan yaen Dalithum Alla ?

    325 302
    முத்துராமலிங்கத் தேவர் இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது ? பிராமணரல்லாதார் என்னும் வகைப் படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன ? பெருமாள் முருகனின் மாதொருபாகன் , பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது ? ‘ போலச்செய்தல் ’ , ‘ திரும்பச்செய்தல் ‘ , ‘ சமஸ்கிருதமயமாக்கல் ‘ போன்ற கருத்தாக்கங்களை எப்படி உள்வாங்கிக்கொள்வது ? தலித் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் படைக்கமுடியுமா ? மாட்டுக் கறியை உண்பதிலும் சமைப்பதிலும் ஏன் இத்தனை தயக்கங்கள் ?
    அயோத்திதாசர் முதல் அம்பேத்கர் வரை ; திராவிட அரசியல் முதல் சாதி அரசியல் வரை ; மாட்டுக்கறி முதல் ஆணவக் கொலை வரை ; மெட்ராஸ் திரைப்படம் தொடங்கி எம்.எஸ்.எஸ் . பாண்டியன் வரை … படர்ந்து விரிந்து செல்லும் பத்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்நூல் . இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக அமைந்திருக்கும் கேள்வி ஒன்றுதான் . ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ?
    ‘ டி . தருமராஜ் அதற்கு அளிக்கும் பதில் உலுக்கியெடுக்கக்கூடியது . ‘ நீ ஏன் தலித்தும் இல்லை என்று கேட்டால் நான் இப்படித்தான் பதில் சொல்வேன் : அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது ! அதே சமயம் , சாதியைக் காரணம் காட்டி , நிகழ்த்தப்படும் கொடூரத்திற்கு எதிராக , நான் தலித்தாக இருப்பதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை . அந்தத் தருணங்களில் நான் , பலவந்தமாய் என்னை மீண்டும் தலித் என்று சொல்லிக்கொள்கிறேன் . ஆமாம் , பலவந்தமாக ! “
    இந்தப் புத்தகத்தை ஒரு கைவிளக்காகக் கொண்டு இன்றைய அரசியல் , சமூக , இலக்கிய நடப்புகளைப் புரிந்துகொள்ள முயலும்போது பல புதிய வெளிச்சங்கள் நமக்குக் கிடைக்கும் . டி . தருமராஜ் விவரித்துள்ள மானுடவியல் , சமூகவியல் மற்றும் நாட்டுப்புறவியல் கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு இந்த உலகையும் , ஏன் நம்மையுமேகூட நிதானமாக அலசிப்பார்க்கும்போது ஒரு ஜோடி புதிய கண்கள் கிடைத்ததைப்போன்ற அதிர்ச்சியும் திகைப்பும் ஒருசேர ஏற்படும் .