Showing all 4 results
-
Read more
பயண சரித்திரம் / Payana Sariththiram
₹420₹391உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன .கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் , உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதி மனிதன் . கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன . கடலுக்குள்ளிருந்து ராட்சத விலங்கு திடீரெனத் தோன்றி கபளீகரம் செய்துவிடும் என்ற பயம் எப்போதும் மனிதனுக்கு இருந்தது . தயக்கத்தையும் பயத்தையும் மீறி , தேவைகளினால் புதிய எல்லைகளைத் தேடி அவனது பயணங்கள் விரிந்தபோது புவியியலின் ரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தன . பயணங்களே உலகின் வரைபடத்துக்கு உயிர் கொடுத்தன .பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள் , கிறித்துவுக்கு முந்தைய காலத்திலேயே கப்பல் கட்டுவதில் கணவான்களாகத் திகழ்ந்த பெனிஸீயர்கள் , சூரியன் உதிக்கும் இடத்தைக் கண்டறியக் கிளம்பிய அலெக்ஸாண்டர் , புத்தரின் தரிசனங்களைத் தேடி நிகழ்த்திய பயணங்களால் அழியாத சரித்திரத்தைப் பதிவு செய்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங் , இரக்கமற்ற கொள்ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிச் சாதித்த வைகிங்குகள் , அன்றைய வெனிஸ் முதல் மயிலாப்பூர் வரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்கோ போலோ , மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி , தன் அனுபவங்களை திக் திக்கென விவரிக்கும் இபின் பதூதா , அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ஸெங் ஹே … இப்படி இந்தப் புத்தகம் பேசும் சுவாரசியப் பயணங்கள் ஏராளம் .இவை பயணிகளின் / பயணங்களின் குறிப்புகள் மட்டுமல்ல . அந்தந்த நூற்றாண்டுகளில் உலகின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் ஆவணமும்கூட . -
Read more
மன்னார் கண்ணீர்க் கடல் / Mannar Kanneer Kadal
₹120₹112மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது . பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டது . அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகளின் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன . நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டடைவது எப்போது ?