Showing all 9 results
-
Add to cart
கர்ணன் / Karnan
₹899₹836என்ன , மீண்டும் மகாபாரதக் கதையா ? ” என்று நீங்கள் மலைக்க வேண்டாம் . நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது : பாண்டவர்கள் நல்லவர்கள் , துரியோதனன் வில்லன் ; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான் ; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார் ; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள் ; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான் ; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர் . என்ன , சரிதானே ?ஆனால் இதே மகாபாரதக் கதையை மராத்திய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார் . இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார் . அதன் விளைவாக , இப்புதினம் , ‘ நான் யார் ? ‘ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது .மேலும் , காலங்காலமாக மனித சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார் . ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும் , அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும் , சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் , ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது . இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும் , அப்பின்புலத்தின் காரணமாக சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன .எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம் , இந்தி , மலையாளம் , கன்னடம் , வங்காளம் , குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது .இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன் ! -
Add to cart
கௌரவன் / Kauravan
₹499₹464நாமறிந்த மகாபாரதம் , குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை . எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன் ‘ துரியோதனன் .பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .இது ஒரு புறம் இருக்க –தென்னக ராஜ்யங்களின் கூட்டமைப்பின் ராஜகுருவான பரசுராமன் , குரு வம்சத்தை வீழ்த்தி ஒட்டுமொத்த பரதகண்டத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் .மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஏகலைவன் , சமுதாயத்தில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பை மீறி ஒரு போர் வீரனாக ஆகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான் ,நாகர்களின் தீவிரவாதத் தலைவனான தட்சகன் , கீழ்ச்சாதியினரையும் தீண்டத்தகாதவர்களையும் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு , ஒரு புரட்சியைத் தூண்டத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான் .சாதிப் பிரிவினை நம் சமுதாயத்திற்கு இன்றியமையாதது , அந்தக் கட்டமைப்புச் சீர்குலையும்போது , ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீரழிந்துவிடும் என்று வலியுறுத்தி , அதற்குப் புனித நூல்களை மேற்கோள் காட்டும் தெளமியன் போன்ற பிராமணர்கள் தங்களை அரசர்களின் ஆலோசகர்களாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் , தன் மனசாட்சிப்படி நடக்க முயலும் பட்டத்து இளவரசனான துரியோதனன் தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது ,அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்நிய நாட்டு இளவரசன் . அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன …