Showing all 9 results
-
Read more
உலக மக்களின் வரலாறு / A People’s History of the World
₹750₹698நாம் இருபத்தொன்றும் நூற்றாண்டில் நுழைகிற போது , இந்த உலகம் பேராசை கொண்டதாக , ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக , இனவெறி , தேசிய மேலாதிக்கவெறி கொண்டதாக , காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக , பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது . — . அரசு தோன்றி , சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு , மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்காளக வாழ்ந்தனர் . அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது , உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன … … வேறு சொற்களில் சொல்வதானால் , ஆளுவோரோ ஆளப்படுவோரோ , எழைகளோ பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் , ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர் .
-
Read more
சோழர்கள் (1&2) / The Cholas (1&2)
₹1,250₹1,163பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம் . கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே , கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன . யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன . இத்தகு சிறப்புடைய வரலாற்றில் , சோழர்களின் ஆட்சி , ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது .சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் , அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது . இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை .சோழர் காலத்தின் முழுமையான வரலாறு , சோழப் பேரரசின் ஆட்சி முறை , வரிவிதிப்பு , நிதி , மக்களின் வாழ்க்கை முறை , வாணிபம் , தொழில் , விவசாயம் , நிலஉரிமை , கல்வி , சமயம் , கலை , இலக்கியம் ஆகியவற்றை , பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார் . -
Read more
பண்டைக்கால இந்தியா / Pandaikkala India
₹410₹381திரு . ஆர்.எஸ் . சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் . இதன் முன்னர் டோரன்டோ மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்றுப் பாடம் போதித்துப் பெரும் புகழ்பெற்றவர் . இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த நற்பெருமையும் இவரைச் சேரும் . ” பண்டைக்கால இந்தியா ” என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல் . பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால் , ஆன்றோர்களால் , சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977 இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது . எனினும் தவறு உணரப்பட்டு , 1980 ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது .
-
Read more
பேரரசன் அசோகன் / Ashoka
₹550₹512அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி , உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்ல்ஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும் , தன் மக்களின் மகிழ்ச்சி , எங்கும் அமைதி , விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் .In the Shadow of the Sword நூலின் ஆசிரியர் Tom Hollandஅசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து , மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார் . தங்களது வழக்கமான வேலைகளின் ஊடே , பலரது மிகவும் துணிச்சலான கண்டுபிடிப்புகள் , அவர்கள் தோண்டியெடுத்த பல சான்றுகள் , சான்றுகளில் மறைந்திருந்த செய்திகளின் பொருள் தேடுதல் இவை எல்லாவற்றையும் தாண்டி , இந்தியாவின் முதல் பெரும் மன்னனின் வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார் . இந்த அசோக மன்னனது சக்கரமே இன்றும் நம் நாட்டுக் கொடியில் நடு நாயகமாக வீற்றிருக்கிறது . இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வரலாற்று நூல் எந்த அளவு நம்மை ஈர்க்கக்கூடியது என்பதும் தெளிவாகிறது . “Rediscovery of India ” நூலின் ஆசிரியர் Lord Meghnad Desai -
Add to cart
முகலாயர்கள் / Mugalayargal
₹640₹595பாபர் , பானிபட் , அக்பர் , தின் இ – லாஹி , தெய்வீகக் தாஜ்மஹால் , காதல் , ஒளரங்கசீப் , தேஜ் பகதூர் , சிவாஜி , மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம் .உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம் . நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய ! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள் .பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது . ஆந்திர எல்லை வரை ஒளரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா ( அன்றைக்கு ஹிந்துஸ்தான் ) உருவாக இன்னும் நாளாகியிருக்கும் ! நமது இன்றைய மதச்சார்பின்மை , அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே .இன்னும் சொல்லலாம் . முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி , நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம் .இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை . ‘ இந்திய தேசியம் ‘ என்னும் கருத்தாக்கம் தோன்றி , வலுப்பெற்று , எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு .யூதர்கள் , செங்கிஸ்கான் வரிசையில் முகிலின் மற்றுமொரு வரலாற்று நூல் . முகலாயர்களின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை முழுமையாக விவரிக்கும் முதல் தமிழ் புத்தகம் இதுவே . இந்திய சமஸ்தானங்கள் குறித்து முகில் எழுதிய அகம் , புறம் , அந்தப்புரம் வரலாற்றுத் தொடர் , குமுதம் ரிப்போர்ட்டரில் இரு ஆண்டுகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது . -
Read more
முற்கால இந்தியா / Murkala India
₹850₹791இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும் , இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல ; சகிப்புத் தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது . இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று .எரிக் ஹாப்ஸ்வாம் -
Add to cart
வரலாற்றில் பிராமண நீக்கம் / Varalatril Brahmana Nikkam
₹550₹512வரலாற்றில் பிராமண நீக்கம் … இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒர் பனுவலாக விளங்க முடியும் . அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற , ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சி செய்யாத நூல் – அண்மைக்காலத்தின் முதல் ‘ கீழிருந்து எழும் வரலாறு ‘ .கெய்ல் ஓம்வெட்முரண்பாடற்ற . நன்கு வாதிக்கின்ற படைப்பு … மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது . அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது .உமா சக்ரவர்த்திஇந்தப் புத்தகம் – இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற . மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று – புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ‘ நல்ல சிந்தனைகளைத் தேடுவதில் ‘ போராடுகின்றமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும் .மெயின்ஸ்ட்ரீம்இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது .சம்மர்ஹில் : ஐஐஏஸ் மதிப்புரை