Showing all 2 results
-
Read more
சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 04
₹140₹130இலங்கை அரசியல் அரங்கின் நடுத்தளத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு முக்கிய கருத்தமைவுச் சக்தியாக சிங்களப் பெருந்தேசிய இனவாதம் இயங்குகிறது. இன்றைய கருத்தமைவு வடிவத்தில் நாம் காணும் சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் ஆரம்பமும் விருத்தியும் பற்றிய கதை, இலங்கை வரலாற்றில் கடந்த நூற்றாண்டுக் காலத்துடன் பின்னிப்பிணைந்த கதையாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இராணுவவாதத்திற்குப் பலியாகியது. குறுந்தேசியவாதம் இராணுவவாதத்தின் கருவியாகியது. தமிழ்த் தேசியவாதம் அதன் எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் பிரதிபிம்பம் போலானது.
தேசிய இனப்பிரச்சனையின் ஜனநாயக் ரீதியான தீர்வுக்கான கொள்கை ஒன்றினைத் தெளிவாக வரையறுத்து, அதன் அடிப்படையிலான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் நிலையில் ஒரு இடதுசாரி அமைப்பும் இருக்கவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் இனங்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தது என்பதை மறந்துவிடலாகாது.