Showing 1–16 of 77 results
-
Add to cart
உடைந்து எழும் நறுமணம் / Udainthu Ezhum Narumanam
₹175₹163கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை , தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார் . நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார் . வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும் , பறந்து போய்விடும் . அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை . வீரபத்ரன்
-
Add to cart
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும் / Oru Pothal Kudaiyum Sila Pothimarngalum
₹140₹130இருளின் அரங்கத்தில் ஒளியின் பிம்பங்கள் அசைவது போல் சமூகத்தின் மூடப்பட்ட சன்னல்களின் பின்னே நூலாம்படைகளாய் சிக்கிக்கொண்ட பெண்ணின் அகவெளியானது மொழியின் வழியாக கவிதையாகவும் , கவிதையின் வழியாக வாழ்வின் அகம் புறம் என்ற பேதமின்றி சொற்களையும் விடுதலை செய்கிறது . வாழ்வின் தீராத வெம்மைகளுக்கு இடையேயும் இடைவிடாத ஒரு வாசிப்பின் இடைவெளியில் பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல் போல் அவ்வப்போது என் மனவெளியில் விழும் சொற்களை அரிதாக கைப்பற்றிக் கொண்ட தருணங்களே இக்கவிதைகள் .– மஞ்சுளா