Showing the single result
-
Read more
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி / Beyond the Power of Your Subconscious Mind
₹295₹274டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழ்மன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை . 1963 ல் ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து , ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன . அதோடு , இன்று நாம் வாழும் இவ்வுலகம் , சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது .டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து , ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே ‘ புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது ‘ என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிக்கொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன் . இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்த போது , இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன் . இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல் .திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன் . இதன் மூல நூலில் இடம்பெற்றிராத ‘ எப்படிச் செய்ய வேண்டும் ‘ என்பது போன்ற விஷயங்களையும் நான் இந்நூலில் சேர்த்திருக்கிறேன் . – முன்னுரையில் ஜேம்ஸ் ஜென்சன்