Showing all 14 results
-
Read more
உங்கள் குழந்தைகள் / Ungal Kuzhanthaigal
₹300₹279ஆரம்பத்தில் குழந்தை அழ , சிரிக்க விரும்பும் . இந்த அழுகை அவனுக்கு ஆழமான தேவையாகும் . அழுகையின் வாயிலாக ஒவ்வொரு நாளும் அவன் உணர்வுகளை வெளியேவீசுகிறான் . குழந்தைக்குப் பலவிதமான ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன . அது அப்படித்தான் இருந்தாக வேண்டும் . அது தேவையுமாகும் . குழந்தைக்கு ஏதோ தேவைப்படுகிறது . ஆனால் , தனக்கு என்ன தேவை என்பதை அதனால் கூற இயலாது . அதை வெளிப்படுத்த அவனால் முடியாது . குழந்தை ஏதோ கேட்கிறது . ஆனால் , அதைக் கொடுக்க முடியாத நிலையில் அதன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் . தாய் அங்கு இல்லாமல் இருக்கலாம் . அவள் வேறு ஏதோ வேலையில் இருந்திருக்கலாம் . அவளால் குழந்தையைக் கவனிக்க முடியாமல் இருந்திருக்கலாம் . அந்தக் கணத்தில் அவனுக்கு கவனம் எதுவும் கிடைக்கவில்லை . எனவே , அவன் அழத் துவங்குகிறான் .தாய் அவனுக்கு பொம்மையைக் கொடுக்கிறாள் . பால் கொடுக்கிறாள் . அவனைச் சமாளிக்க , சமாதானப்படுத்த எதையாவது செய்கிறார்கள் . ஏனெனில் , அவன் அழக்கூடாது .ஆனால் , அழுகை மிகவும் அவசியமான ஒன்றாகும் . அவன் அழுதால் அவனை அழ விட்டுவிட வேண்டும் . அழுதபின் அவன் புத்துணர்வுடன் இருப்பான் . அந்த ஏமாற்றம் அழுகையின் மூலம் வெளியே வீசப்பட்டுவிட்டது . அழுகையை நிறுத்திவிட்டால் ஏமாற்றமும் உள்ளேயே நின்றுவிடும் . அவன் அதன்மீது மற்றவைகளை இட்டு நிரப்புவான் . அழுகையும் உள்ளே அதிகரித்துக்கொண்டே போகும் .– ஓஷோ -
Read more
புதிய வாழ்க்கையின் திறவுகோல் / Puthiya Vazhkaiyin Thiravugoal
₹200₹186வாழ்க்கை என்பது கிரகிக்கப்பட்ட விடைகளைக் கேட்பதில்லை . ஒவ்வொரு நாளும் , வாழ்க்கை அதன் கேள்விகளை மாற்றிக் கொண்டிருக்கிறது . நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்ட , ஒத்திகை பார்த்த பதில்களோடு இருக்கிறோம் . வாழ்க்கைக்கு கிரகிக்கப்பட்ட பதில்கள் தேவையில்லை , வாழ்க்கைக்குத் தேவை சிந்தனையுள்ள உணர்வு . ஏதாவது கேள்வி எழுந்தால் , அது அந்த உணர்வில் பிரதிபலிக்கும் , அது உணர்வுக்கு ஒரு சவால் விடும் , பிறகு விடை வரும் . யோசிப்பதினால் , விடை தன்னால் வரும் , ஆனால் நம்பிக்கையால் , பதில் என்பது கற்றுக்கொண்டது , கிரகித்துக் கொண்டது . கிரகிக்கப்பட்ட விடைகளை தன் மனதில் வைத்திருப்பவர் வாழ்க்கையோடு இசைந்து போக முடியாது . வாழ்க்கை ஒவ்வொரு நாளும் முன்னே நகர்ந்து செல்கிறது . வாழ்க்கையின் கங்கை நிற்பதில்லை , அது உன்னுடைய கிரகிக்கப்பட்ட பதில்களுக்காக இல்லை , ஒவ்வொரு நாளும் புதிது . அது புதிய கேள்விகளை எழுப்புகிறது . நீங்கள் உங்கள் புத்தகங்களைத் திறந்து விடைகளைப் பார்ப்பதற்கு முன்பு , நீங்கள் நிமிர்ந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கை நகர்ந்து போய் அது புதிய கேள்விகளை எழுப்பியிருக்கும் . நீங்கள் எப்போதும் பின்தங்கியே இருக்கிறீர்கள் . அதனால் உங்கள் சிந்தனையைத் தட்டி எழுப்புங்கள் . அதனால் முதல் திறவு கோல் என்பது உங்கள் சிந்தனையின் சக்தியை தட்டி எழுப்புவதுதான் .
-
Read more
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை / Maruthuvathilirunthu Manamattra Nilai Varai
₹320₹298உங்கள் மனதின் நிலை’க்கும் உங்கள் ஆரோக்கிய நிலை’க்கும் உள்ள தொடர்பு என்ன ?அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து , பல ஆய்வுகளுக்குப் பின்னர் , மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள் . ஆரோக்கியம் , நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது . தியானம் மூலமாக நல்ல ஆரோக்கியத்தையும் , நல் இருத்தலின் மூலம் பெரும் உணர்வையும் பெற முடியுமா என்று வியந்து போகிறவர்களுக்கு ஒரு புதிய மொழியில் , ஆழமாக , விறுவிறுப்பாக , எளிதில் புரிந்துகொள்ளும்படியான புத்தகம் இது .