Showing all 5 results
-
Add to cart
கலங்கிய நதி / Kalankiya Nati
₹390₹363ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள் . கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை உச்சத்தை அடையும் தருவாயில் சந்திரன் தன் நிறுவனத்தில் நடந்த பெரிய ஊழலைக் கண்டுபிடிக்கிறான் . அதனால் தனக்கு ஏற்படும் சிக்கல்களையும் கடத்தல் நாடகம் எவ்வாறு முடிவுறுகிறது என்பதைப் பற்றியும் நாவல் எழுத முனைகிறான் . பல அடுக்குகள் கொண்ட இந்த நாவல் கதைக்கும் அதை எழுதுபவனுக்கும் உள்ள எல்லைக்கோட்டை மாறி மாறிக் கடக்கிறது . சந்திரனின் மனைவி சுகன்யாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனையில் உண்மையின் பல சாயல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன .தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச் சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான பி . ஏ . கிருஷ்ணன் தன் முதல் நாவலான The Tiger Claw Tree ஐத் தமிழில் புலிநகக் கொன்றை எனப் படைத்தார் . பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்ற அப்படைப்புக்குப் பின் கலங்கிய நதி கிருஷ்ணனின் இரண்டாம் புதினமான The Muddy River இன் தமிழ் வடிவமாக வெளிவருகிறது . -
Add to cart
புலிநகக் கொன்றை / Pulinaga Kontrai
₹375₹349தென் ன் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை , படர்ந்து விரிகிறது இந்த நாவலில் . எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்து கிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை . படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா பாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் . சிதறுண்டுபோன , மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்களான நம்பியும் கண்ணனும் நுழைகிறார்கள் . மரணத்தின் மடியிலும் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல் .It is epical but minus the constraints of an epic . .The HinduReminds one of Garcia Marquez’s ‘ One Hundred Years of Solitude ‘ .. . The Statesman -
Add to cart
மேற்கத்திய ஓவியங்கள் / Merkathiya Oviyangal
₹975₹907ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ . நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது , பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள் வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார் . ” தியடோர் பாஸ்கரன் , ‘ தி இந்து ‘ நாளிதழில் மேற்கத்திய ஓவியங்கள் முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது . நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி . என்பவை பற்றியும் சுருக்கமாக , ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் . பி.ஏ. கிருஷ்ணன் இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன . இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைலகற்களாக அமையும் என்பது உறுதி
-
Add to cart
மேற்கத்திய ஓவியங்கள் 1 / Merkathiya Oviyangal 1
₹1,350₹1,256மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது . இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது , உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர் , அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் . வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது . அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது , பற்பல ஓவிய மேதைகள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறார்கள் . குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஓவியர்களுடன் முடியும் முதல் பாகம் 160 பல வண்ண ஓவியங்களுடன் மிக அழகான முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .