Showing all 5 results
-
Add to cart
கதையும் புனைவும் / Kathaiyum Punaivum
₹250₹233புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது . வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது . முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் புதிய கோட்பாட்டுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை அவை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது . குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது .
-
Add to cart
தாண்டவராயன் கதை / Taantavaraayan Katai
₹1,390₹1,293கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட் . கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட . கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின் கணவனை அவளுடைய கதைகளில் ஒன்றாகக் கண்டுபிடிக்கிறார் கிரிஃபித் அப் ஒவைன் .பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது . தராசில் வைக்க ‘ தாண்டவராயன் கதை ‘ இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம் .( ராஜன் குறை , ‘ குமுதம் தீராநதி ‘ )‘ தாண்டவராயன் கதை ‘ ஒரு அசாதாரணமான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது .( கா . மோகன்ராம் , ‘ கல்குதிரை ‘ )