Showing all 15 results
-
Read more
Nattu Kanakku /நாட்டுக் கணக்கு
₹275₹256வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.
-
Read more
உயர… உயர… / Uyara… Uyara…
₹175₹163சம்பாதிப்பது மகிழ்ச்சி தரும். அதைவிடவும் மகிழ்ச்சி தருவது, சம்பாதித்ததிலிருந்து ஒரு துளியேனும் மற்றவர்களுக்கு அளிப்பது. வாழ்வது முக்கியம். அதைவிடவும் முக்கியம், முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்வது. உயரத்தைத் தொடுவது மட்டுமல்ல நம் இலக்கு. எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவோடு இருப்பதும்தான்.
நம்மிடம் இல்லாதவற்றைப் பட்டியலிட்டால் அது பெரியதாக இருக்கும். நம்மிடம் ஏற்கெனவே இருப்பவற்றின் பட்டியல் நிச்சயம் அதைவிடவும் பெரியது. இருந்தும், இல்லாததையே நாம் நாடிக்கொண்டிருக்கிறோம். அதற்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் விரும்பியடி உலகம் இயங்குவதில்லை. நமக்கு நெருக்கமானவர்களேகூட நூற்றுக்கு நூறு நம்மோடு ஒத்துப்போவதில்லை. இருந்தாலும் இந்த உலகில்தான் வாழ்ந்தாகவேண்டும். நம்மோடு முரண்படுபவர்களோடும் சேர்ந்துதான் இருந்தாகவேண்டும்.
வாழ்வில் ஏற்படும் முரண்களைக் களைந்து, ஒரு பறவையைப்போல் சிறகுகள் விரித்து உயரே, உயரே பறக்க விரும்புபவர்களுக்கான புத்தகம் இது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல; உறவுகளில், மன நிம்மதியில், மற்றவர்களுக்கு அளித்து மகிழ்வதில், ஆளுமைகளாக உருவாவதில் புதிய உயரங்களை அடைய இந்நூல் உதவும். கதைகள், அனுபவங்கள், சிந்தனைகள், செயல்திட்டங்கள் அனைத்தையும் சேர்த்து ஓர் அருமையான கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். வளமும் மகிழ்வும் பெற்று வாழ்வதற்கான சாவி இந்நூல்.