Showing the single result
-
Read more
மானாவாரி மனிதர்கள் / Manavari Manithargal
₹150₹140இன்றைய அறிவியல் வளர்ச்சியில் , பிரபஞ்சவெளியில் பிற கோள்களை ஆராய்ச்சி செய்கிறான் மனிதன் . இந்த பூமியில் மணிதகுணம் வாழ்வதற்குத் தண்ணீரும் , உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட இது பொருத்தும் சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக் கருத்தை கொங்கு கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன் , இந்த மானாவாரி மனிதர்களில் இவர் கூறியுள்ள தண்ணீர்ப் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது . மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது .. மூக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது . அமரர் அகிலன் நினைவு நாவல் விருதும் , ஆண்டின் சிறந்த நாயலுக்கான இலக்கியச் சிந்தனை விருதும் இதற்கு எளிய அங்கீகாரங்களே . மக்கள் இலக்கியத்தில் இந்த நாவல் மணிவிளக்காக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பதே மகத்தான விருது .